05.02.2020 // மிக அவசரம் //
அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளியில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 01.00 மணிக்குள் தனிநபர் மூலம் மூன்று நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசாணை நகல் மற்றும் தொடர்நீட்டிப்பு அரசாணை நகல், அளவுகோல் பதிவேட்டின் நகல் இணைத்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் இல்லாத பள்ளிகள் இணைப்பில் காணும் படிவத்தில் இன்மை அறிக்கையினை இவ்வலுவலக மின்னஞ்சலில் (deottr@nic.in) பிற்பகல் 01.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் நகலினை ஆ2 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தொகுப்பறிக்கை இன்று மாலை சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால் எவ்வித சுணக்கமும் இன்றி விவரங்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2