Thursday, 9 January 2020

09.01.2020      // மிக அவசரம் //  தனி கவனம் //  IFHRMS

அனைத்து அரசு /அரசு நிதியுதவி /உயர்/மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்நிலை கருவூலகத்தின் மூலம் சம்பளம் பெற்று வழங்கும்  அலுவலர்கள் /  தலைமை ஆசிரியர்கள் கீழ் கண்ட நடைமுறைகளை எவ்வித கால தாமதமும் இன்றி உடன் செயல்படுத்த தெரிவிக்கலாகிறது.

1. தங்கள்  பள்ளியில் IFHRMS - ல் சம்பள பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக Windows 10 version வசதி உள்ள கணினி வழங்கப்பட்டுள்ளதா ? என்றும் இல்லை எனில் கணினி தேவைக்கான Static கடிதம் அனுப்பிய நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

2. 4G Net connectivity இருந்தால் IP Address தெரிவிக்கப்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லை எனில் உங்கள் Higher Authority க்கு இணைய வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்க்காக கடிதம் எழுதி அதன் நகல் சார் கருவூலகத்துக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. IFHRMS ல் Dues and Deductions வரும் 20 Jan 2020 தேதிக்குள் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புதல் கடிதம் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. மேலும் ATBPS பட்டியல் மற்றும் IFHRMS ஜனவரி மாத சம்பள பட்டியலுடன் ஒப்பிட்டு செய்து சமமான சம்பள பட்டியலுக்கு மட்டுமே முதலில் வில்லை எண் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.