Thursday, 2 January 2020

02.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - சிறுபான்மையினர் மொழி பயிலும் மாணாக்கர்களுக்கு 2020 முதல் 2022 வரையிலான கல்வி ஆண்டுகளுக்கு தமிழ் கட்டாயம் கற்றச் சட்டம் 2006-இல் இருந்து அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பகுதி-I-ல் அவரவர் மொழிப்பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பகுதி-I-ல் சிறுபான்மையினர்  மொழி பயிலும் மாணாக்கர்களுக்கு அவரவர் மொழிப்பாடத்தில் பெயர் பட்டியலில் (Nominal Roll) விண்ணப்பித்துள்ளதை 04.01.2020-க்குள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   Attachment