19.12.2019 அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரம் கோருதல் - சார்பு. இணைப்பிலுள்ள இயக்குநரின் செயல்முறைகளிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.12.2019 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் மின்னஞ்சலில் (deottr@nic.in) அனுப்பிவிட்டு அதன் நகலினை இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அதே படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1 ATTACHMENT - 2