18.10.2019 - நினைவூட்டல் -2 மிக மிக அவசரம்
அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளி கழிப்பறை பராமரிப்பு - VPRC - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலுள்ள கழிவறை பராமரிக்க ஆகும் செலவினங்கள் மற்றும் VPRC மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் பணியாளருக்கு நிதி வழங்குவது சார்பாக ஜனவரி -19 முதல் செப்படமபர் 2019-ம் தேதி வரை அறிக்கை கோரப்பட்டது. இந்நாள் வரையில் சில பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் முழு வடிவிலான சரியான விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை (இதனால் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது.) எனவே கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி முழுமையான வடிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. படிவத்தினை பூர்த்தி செய்யும் போது பராமரிப்பு தொகை தவிர்த்து நிரப்பப்பட வேண்டும்.
2.படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கபட வேண்டிய விவரங்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தில் CREDIT & DEBIT செய்யப்பட்ட பக்கத்தின் நகல் ஜனவரி 19 முதல் செப்டம்பர் 19 முடிய மாதங்களுக்கு உள்ள விபரங்கள் சமர்ப்பிக்கப்ட வேண்டும்
3. Acquittance copy தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்