Friday, 23 September 2022

 23/09/2022      // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / நிதியுதவி , உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 -2023 எண்வகைப்பட்டியல் 31.07.2022 நிலவரப்படி கோரப்பட்ட தகவல் சம்மந்தமாக 

1 . NUMBER STATEMENT ANNUXURE  - இல் (IFHRMS)  கணக்கு  தலைப்பு வாரியாக திருத்தப்பட்ட EXCEL FORM (ANNUXURE 1  மட்டும்) இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 குறிப்பு  EXCEL ANNUXURE 1   ஐ  CD யில் Copy  செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் மற்றும் பிரிவு எழுத்தர் உடன் அவசியம் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

தலைமை  ஆசிரியர் கூட்டம் நடைபெறும் இடம் 

 GDP HALL (Subcollectore office ) பின்புறம் 

நாள் :23.09.2022

நேரம் : மாலை 3.00 மணி 

Thursday, 22 September 2022

 23.09.2022 

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 26.09.2022 முதல் 29.09.2022 வரை உள்ள  நாட்களில் கீழ்கண்ட அலுவலர்களை அழைத்து 6 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு  போதைப்பொருள்  விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தி அறிக்கை மற்றும் புகைப்படத்துடன்  2 நகல்களில்  இவ்வலுவலகத்திற்கு தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 14 September 2022

 15.09.2022      

// எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 4  மற்றும் கூடுதல் விவரம் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -  இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு  இணைப்பில் உள்ள பள்ளிகள் இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். இன்று மாலை 04.00 மணிக்குள் எண்பட்டியலை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3  கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5 

குறிப்பு:  ஏற்கனவே வழங்கிய பள்ளிகள்  NUMBER STATEMENT ANNEXURE   இல் உள்ள EXCEL  1,2,3  படிவம்  தலைப்பு வாரியாக தற்போது பதிவிறக்கம் செய்து வழங்குமாறு தெரிவிக்கலாகிறது. 

எண்வகைப் பட்டியல் வராத பள்ளிகள்

1. அ.உ.நி.பள்ளி பீ.நாயக்கனூர்

2. அ.உ.நி.பள்ளி கொல்லக்குப்பம்

3. அ.உ.நி.பள்ளி பெரியகுரும்பத்தெரு

4. அ.உ.நி.பள்ளி கோணப்பட்டு

5.அ.உ.நி.பள்ளி புத்தகரம் 

6.அ.உ.நி.பள்ளி சின்னகம்மியம்பட்டு

7. அ.உ.நி.பள்ளி கும்மிடிகாம்பட்டி

8. அ.உ.நி.பள்ளி திம்மணாமுத்தூர்

9. அ.மே.நி.பள்ளி வெள்ளக்குட்டை

10. அ.மே.நி.பள்ளி மிட்டூர்

11. அ.மே.நி.பள்ளி மல்லப்பள்ளி

12. அ.மே.நி.பள்ளி கேத்தாண்டப்பட்டி

13. அ.உ.நி.பள்ளி சந்திரபுரம்

14. அ.மே.நி.பள்ளி அத்தனாவூர்.

15.அ.ஆ.மே.நி.பள்ளி புதுப்பேட்டை

16. அ.மாதிரி மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

17. அ.மே.நி.பள்ளி பெரியகண்ணாலப்பட்டி

18. அ.மே.நி.பள்ளி பேராம்பட்டு

19. அ.மே.நி.பள்ளி  நத்தம் 

20. அ.மே.நி.பள்ளி கொரட்டி 

21. அ.பெ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி 

22. அ.ஆ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி

23. அ.மே.நி.பள்ளி பொம்மிகுப்பம்

24. அ.மே.நி.பள்ளி ஆண்டியப்பனூர்

25. அ.ஆ.மே.நி.பள்ளி திருப்பத்தூர்

26. அ.ஆ.மே.நி.பள்ளி மடவாளம்.

27.அ.உ.நி.பள்ளி நெக்குந்தி 

நிதியுதவிப்பள்ளிகள் 

1. டான்போஸ்கோ மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

2. செயின்ட் சார்லஸ் மே.நி.பள்ளி அத்தனாவூர்

3. செயின் ஜோசப்  பெண்கள் மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

4. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

5. மேரி இமாக்குலேட் பெண்கள் மே.நி.பள்ளி திருப்பத்தூர் 

6. இராமகிருஷ்ணா மே.நி.பள்ளி திருப்பத்தூர். 

7. டி.எம்.எஸ். மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

8.உபைபாஸ் மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

9.உஸ்மானியா மே.நி.பள்ளி திருப்பத்தூர். 

10. அரசு பூங்கா உ.நி.பள்ளி திருப்பத்தூர். 


Tuesday, 13 September 2022

 14.09.2022

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 2295/அ1/2022    நாள்.  14.09.2022


அனைத்து வகை அரசு /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை   இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

 13.09.2022

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, 

இணைப்பில் உள்ள ONLINE SHEET  இல் தங்கள் பள்ளியில்  JRC இல் பொறுப்பில் இருக்கும் கவுன்சிலர் பெயர் மற்றும் மாணவ மாணவியரின் எண்ணிக்கையை  14.09.2022  அன்று காலை  10.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

குறிப்பு:  JRC  - இணை செயல்பாடு இல்லாத பள்ளிகளில் உடனே ஏற்படுத்தி அத்தகவலை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. (தொடர்புக்கு  திரு.மு.தண்டபாணி  - 9047509725  அ.மே.நி.பள்ளி, பொம்மிகுப்பம்)

Monday, 12 September 2022

 13.09.2022        // தனிகவனம் // மிக மிக அவசரம் //

இணைப்பில் கண்டுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித்தலைமை அசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளுக்கு நபார்டு வங்கி நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் டான்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட தளவாட சாமான்களுக்கான பற்றுச்சீட்டு (VOUCHER)  இரண்டு நகல்கள் இவ்வலுவலக  அ4 பிரிவில் இன்று மாலை 02.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 12.09.2022      // மிகவும் அவசரம் // தனிகவனம் //

அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு வரவு செலவுத்திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2022 நிலையிலான பணியிடங்கள் அடிப்படையில் எண்வகைப்பட்டியல் தயார் செய்து 2022 - 2023 திருத்த மதிப்பீடு மற்றும் 2023 - 2024 திட்ட மதிப்பீடு பணிகளுக்காக அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, IFHRMS - இல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து பெறுதல் சார்பான அறிவுரைகள் பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 049890/பி1/இ1/2022, நாள். 23.08.2022, 26.08.2022 மற்றும் 30.08.2022 - இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.09.2022  அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் எண்வகைப் பட்டியல் சமர்ப்பிக்கப்படாத பள்ளிகள் நாளை 13.09.2022  காலை  10.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களே பொறுப்பு என தெரிவிக்கலாகிறது. 

 12.09.2022

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை அழைத்து தங்கள் பள்ளியில் போதை பொருள் சார்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அதன் விவரத்தினை புகைப்படத்துடன் 14.09.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறதுஇணைப்பு 

Sunday, 11 September 2022

 

12.09.2022

அரசு உயர்நிலைப்பள்ளி அச்சமங்கலம், திருப்பத்தூர்

விளையாட்டு விழா அழைப்பிதழ்

ஜோலார்பேட்டை வட்ட அளவிலான, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி  மாணவ  மாணவர்களுக்கான 

தடகள விளையாட்டு விழா

 

அன்புடையீர் வணக்கம்,

நிகழும்  2022 ஆம் ஆண்டு 13.09.2022 செவ்வாய்கிழமை மற்றும்  15.09.2022 வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஜோலார்பேட்டை வட்ட அளவிலான உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ  மாணவர்கள் பங்கு பெறும் தடகள விளையாட்டு விழா சோலையார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் (MINI STADIUM)              நடைபெற உள்ளதால்  நாளை 13.09.2022 ஆண்களுக்கும்,  15.09.2022 பெண்களுக்கும்,  காலை  8.30 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளதால் இணைப்பில் உள்ள ஆசிரியர்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Wednesday, 7 September 2022

 08.09.2022

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு EYE SCREENING, BMI, LIBRARY, HEALTH CHECKUP போன்ற செயல்பாடுகளை உடன் முடித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 07.09.2022

அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் காணும் செயல்முறைகள் தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறதுஇணைப்பு 

 07.09.2022  

அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Monday, 5 September 2022

 06.09.2022                           //மிக அவசரம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2012 - 2013 கல்வியாண்டிற்கு பின்னர் அச்சடிக்கப்பட்ட பழையை வழக்கொழிந்த பாடநூல்கள் (Obsolete) ஏதேனும் இருப்பில் இருப்பின்  பாடம்  மற்றும் வகுப்பு வாரியாக தனித் தனியாக எடை போட்டு 07.09.2022 முதல் 09.09.2022 வரை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு

 


Wednesday, 31 August 2022

 01.09.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 3  மற்றும் கூடுதல் விவரம் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -  இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 2 இல் NUMBER STATEMENT  பதிவிறக்கம் செய்யும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் , 29.08.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் 30.08.2022 அன்று  பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கும் தொகுத்து பணிந்து அனுப்பவேண்டி உள்ளதால் காலதாமதம் இல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு 01.09.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3  கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5

Tuesday, 30 August 2022

 30/08/2022    

அனைத்து  அரசு  / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 ஜோலார்பேட்டை குறு வட்ட விளையாட்டு R.D& B.D.GAMES OFFICIALS LIST      கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு நடுவர்களாக பணியாற்ற  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்- இணைப்பு 

தேதி :-01.09.2022 07.09.2022 09.09.2022 


Monday, 29 August 2022

 30.08.2022 //   

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

உதவியாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர் சார்பான விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 30.08.2022 மாலைக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன்  1 நகலினை  இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் காலிப்பணியிடம் எனில் அதற்கான அரசாணை எண் மற்றும் நாள் குறிப்பிட்டு அதேபடிவத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Sunday, 28 August 2022

 29.08.2022  // மிக அவசரம் தனி கவனம் //

    அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல மாணவியர்களுக்கு கிராமப்புற பெண்கள் கல்வி ஊக்கத்தொகை திட்டம் வழங்குதல் சார்பாக கேட்பு  பட்டியல் இணைப்பில்  உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளியின் வங்கி கணக்கு எண். முதல் பக்க 3 நகலுடன் 01.09.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதில் தனி கவனம் செலுத்தி பிழையின்றி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Friday, 26 August 2022

 26.08.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 2 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 2 இல் NUMBER STATEMENT  பதிவிறக்கம் செய்யும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் , 29.08.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் 30.08.2022 அன்று  பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கும் தொகுத்து பணிந்து அனுப்பவேண்டி உள்ளதால் காலதாமதம் இல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு 29.08.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3 

Thursday, 25 August 2022

 26.08.2022  

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் கடிதத்தின்படி சிறுபான்மையினர் நலம் - கிராமப்புறப்பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் கல்வி கற்பதில் இடை நிறுத்தம் செய்வதை தடுத்தல் அம்மாணவிகள் தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவித்தல் 2021-2022 ஆம் கல்வி ஆண்டின் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையில் பயிலும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பெண் குழுந்தைகள் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  29.08.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு 

 25.08.2022

 அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  உயர்கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிக்கட்டுதல் ( career guidance ) 2021  -2022  ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கூட்டம் -  அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்ந்த  செயல்முறைகள் இணைப்பில் கண்டவாறு  உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. இணைப்பு