Tuesday, 15 February 2022

வங்கி கணக்கு விவரம்

 15.02.2021   // அவசரம் தனி கவனம்//

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

வங்கி கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "AMOUNT AVILABLE FOR REMITTANCE   தொகையினை அரசுக்கணக்கில் செலுத்துதல்  

இணைக்கப்பட்டுள்ள படிவம் 2 இல்  திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளின் வரிசை எண்.21397 முதல் 21582 வரை உள்ள  பள்ளிகள் படிவம் 2 இல் "AMOUNT AVILABLE FOR REMITTANCE  என்ற கலத்தில் உள்ள தொகையினை இணைப்பில் உள்ள அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி செலுத்து சீட்டின் விவரங்களை படிவத்தில் உள்ள P  and Q  என்ற கலத்தில் பூர்த்தி செய்து, மேலும் படிவம் -2 மற்றும் செலுத்து சீட்டினை SCAN  செய்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு     அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலக deotpt2015 @ gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை   ஆ1 பிரிவுல்  தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

இணைப்பு1 இணைப்பு2 . 

 



 

Sunday, 6 February 2022

அரசு நிதியுதவி பெறும் பள்ளி , குழுக்காப்பீட்டு திட்டம்

07.02.2022 // மிக மிக அவசரம்//

 அனைத்து அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

குழுக்காப்பீட்டுத்திட்டம் சார்பான இணைப்பில்  உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து இன்று(07.02.2022)  01.00  மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com  and deottr@nic. in )  அனுப்புமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Friday, 4 February 2022

ப்ரி மேட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்

 

04.02.2022 // 

அனைத்து அரசு /அரசு உதவி பெறும்/ தனியார்/ ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ஒன்பதாம் வகுப்பு (ப்ரீ மெட்ரிக்) பதினோராம் வகுப்பு (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவி தொகை பெற தகுதியுள்ள மாணாக்கர்களின் விண்ணப்பித்தல் பணியினை 8.2.2022-க்குள் முடித்துவிட்டு அதன் Print for despatch ஒரு நகலை மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் மற்றொரு நகலை திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்து அனைத்து பள்ளி தலைமை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு :-

    மாணாக்கர்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாவட்டம் தேர்வு செய்ததில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா என்று தேர்வு செய்யவும்

Thursday, 3 February 2022

NTSE தேர்வு

 அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

05.02.2022 அன்று நடைபெறும் NTSE தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் உரிய தேர்வு மையத்தில் 04.02.2022 அன்று பிற்பகல்  02 .00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது. 

    மேலும் தங்கள் மையத்திற்கு தேவையான OMR SHEET இவ்வலுவலகத்தில் 04.02.2022 அன்று காலை 10.00 மணிக்கு பெற்று செல்ல முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது
 மேலும் இணைப்பில் தேர்விற்கான வருகை பதிவேடு அக்கடன்சி ,தேர்விற்கான வழிகட்டுதல்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  ATTACHMENT 2 ATTACHMENT3 ATTACHMENT4

Wednesday, 2 February 2022

 03.02.2022      // மிக அவசரம் //

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி இணைப்பில் உள்ள  GOOGLE ONLINE SHEET  இல் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் வங்கிக்  கணக்கு எண்களை சரிபார்த்து, ONLINE படிவத்தில்  விடுபட்டுள்ள விவரங்களை உடனடியாக  பூர்த்தி செய்து அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இது நாள் வரை  ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்யாமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாகும் இனியும் காலதாமதம் செய்யாமல் இன்று மாலை 05.00 மணிக்குள் படிவத்தினை பூர்த்தி செய்யுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மற்றும் காலதாமதத்தை தவிர்த்து விரைவாக செயல்படுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறதுONLINE SHEET

 02.02.2022   //   தேர்வுகள் தனிகவனம்//

னைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு –

2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் (பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு) செலுத்துவதற்கு மேலும் கூடுதலாக 03.02.2022 முதல் 05.02.2022 வரையிலான நாட்களில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன் பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 

Monday, 31 January 2022

 

31.01.2022   // தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

20.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 01.02.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் notification என்ற icon click செய்து அதில் ESLC (private appearance) examination என்ற பக்கத்தில் ESLC RESULT DEC2021 என்பதனை CLICK செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.  

31.01.2022      // மிக அவசரம் //

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி இணைப்பில் உள்ள  GOOGLE ONLINE SHEET  இல் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் வங்கிக்  கணக்கு எண்களை சரிபார்த்து, ONLINE படிவத்தில்  விடுபட்டுள்ள விவரங்களை உடனடியாக  பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மற்றும் காலதாமதத்தை தவிர்த்து விரைவாக செயல்படுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ONLINE SHEET

Friday, 28 January 2022

 

29.01.2022      நினைவூட்டல் – 1 // தேர்வுகள்// தேதி மாற்றம் //

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

 ஊரகத்திறனாய்வு தேர்வு (TRUST EXAM) பிப்ரவரி - 2022   20.02.2022 இல் நடைபெற இருந்த தேர்வுதற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறஉள்ளதால், 27.02.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இத்தேர்வினுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Tuesday, 25 January 2022

 25.01.2022   மேம்படுத்துதல் (UPDATION) //தேர்வுகள்//  தனிகவனம்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்  தொகைத் திட்டத் தேர்வுகள் (NMMS)மார்ச் 2022 – பள்ளி  மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தினை www.dge.tn.gov.in என்ற   இணையதளத்தில்  செலுத்த இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு/நிதியுதவி/நடுநிலை உயர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு -1, இணைப்பு -2

 

 

25.01.2022

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.

 இணைப்பில் உள்ள பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைக்கிணங்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் பெறப்பட்ட மனுதாரர் திரு.D. பாலு என்பவரின் மனு இத்துடன் இணைத்து அனைத்து உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

 மேலும் மனுதாரர் கோரப்பட்ட தகவல்களை நேரடியாக மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Sunday, 23 January 2022

 

24.01.2022   //தேர்வுகள்//  தனிகவனம்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுகள்(NMMS), மார்ச் 2022 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தினை www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்த இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு/நிதியுதவி/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

இணைப்பு -1    இணைப்பு -2  , இணைப்பு -3

Friday, 21 January 2022

 

21.01.2022  

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பொதுசார்நிலைப் பணி - பதிவறை எழுத்தர் பதவி யிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்குவது - 01.12.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக 1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1  இணைப்பு -2

 21.01.2022  

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அடிப்படைப் பணி - இரவுக் காவலர்/தோட்டக்காரர்/நீர் வழங்குபவர்/ பெருக்குபவர்/ துப்புறவாளர் மற்றும் அலுவலக உதவியாளர் - பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்குவது - 01.12.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு -2

Thursday, 20 January 2022

 

21.01.2022            நினைவூட்டல்-1 //தேர்வுகள்//  தனிகவனம்  

 அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ். உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு .

 தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) ஜனவரி 2022 – 29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) 05.02.2022 (சனிக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. தேர்வு தேதி மாற்றத்தினை தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை (Hall Ticket) 25.01.2022 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Wednesday, 19 January 2022

 

20.01.2022    //நினைவூட்டல்-1//தேர்வுகள் அவசரம்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்பள்ளி மாணாக்கர்களின் தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் 21.01.2022 முதல் 31.01.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு