Wednesday, 19 January 2022

 

19.01.2022   //தேர்வுகள்//

அனைத்து  வகை  அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

 

2021 -2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் விவரங்களை 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன என தெரியவித்ததால் பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கும் 20.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன் பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

 

குறிப்பு :இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு.

Wednesday, 12 January 2022

 13.01.2022 //தேர்வுகள்// தனி கவனம்.(NTSE EXAM POSTPONED)


அனைத்து அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி/ சிபிஎஸ்சி மற்றும் கேவி கேந்திர வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு.

23.01.2022(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 29.01.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர்/தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID, Password- ஐப் பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு களில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிகப்பு நிற மையினால் குறித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பு இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 , இணைப்பு 2

Tuesday, 11 January 2022

 12.01.2022      //தேர்வுகள்// தனி கவனம்.

அனைத்து வகை அரசு பள்ளிகள்/ அரசு உதவி பெறும் பள்ளிகள்/ மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் தலைமையாசிரியர் கவனத்திற்கு. மற்றும் வட்டார வள அலுவலர்கள் கவனத்திற்கு.

05.03.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை(NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்ப படிவங்களை 12.01.2022 முதல் 27.01.2022- க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 27.01.2022-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1, இணைப்பு - 2

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 7 January 2022

 07.01.2022  

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - வரவு செலவுத் திட்டம் - 2022 - 2023 எண் வகைப் பட்டியல் - தயார் செய்தல்  - IFHRMS - இல் எண் வகைப் பட்டியல் - விவரம் கோருதல் சார்ந்து இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைக் கடிதத்தை பின்பற்றுமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து  10.01.2022 மாலைக்குள் மாவட்டக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன் இரு நகலை இவ்வலுவலக ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டால் சார்ந்த தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. இணைப்பு - 1  இணைப்பு - 2 

Wednesday, 5 January 2022

 05.01.2022    // அவசரம் //  தனிகவனம் // 

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

01.01.2022 இல் உள்ளவாறு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்  பதவியிலிருந்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தோர் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய 2015 ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கருத்துருக்களை 3 நகல்களில் 06.01.2022 காலை 10.30 மணிக்குள் முழுவடிவில்  இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் EMIS ID மற்றும் பணிபுரியும் பள்ளியின் UDISE NUMBER முகப்பு கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு.

1.திரு.G.செல்வசேகரன், த.ஆ அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி.

2.திரு.M.ஜான்பேட்ரிக், த.ஆ  அரசு உயர்நிலைப்பள்ளி, கோணப்பட்டு.


Tuesday, 4 January 2022

 05.01.2022         // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் //  தனி கவனம் //                                                                           

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10 ஆம் வகுப்பு ) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12 ஆம் வகுப்பு) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை 05.01.2022 04.00 மணிக்குள் மாணவரின் புதுப்பித்தல் முடித்துவைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விண்ணப்பம் Submit அனுமதிக்கப்பட்டப்பின் print for Dispatch  நகலை திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் அனுப்பிவிட்டு அதன் 3 நகலினை தனிநபர் மூலம் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு1  இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5

 

05.01.2022   //தேர்வுகள்// தனிகவனம் 

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

 

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் (Exam Fees) மற்றும் TML கட்டணம் – 05.01.2022 முதல் 20.01.2022 வரையில் ஆன்லைன் வழியாக செலுத்துதல் குறித்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Monday, 3 January 2022

 04.01.2022  

அனைத்து  வகை அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் ஆண்டு  - அரசு  / நகராட்சி  உயர்/ மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  நெறிமுறைகள் சார்ந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது - மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள்  உரிய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் நாளை (05.01.2022) மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு:  மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்கள்  2 நகல்களிலும்  மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்கள் 3 நகல்களிலும்  வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2

 

04.01.2021   //தேர்வுகள் // தனிகவனம் // 

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,,

2021-2022 ஆம் கல்வியாண்டு  10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி 12.01.2022 காலை 11.00 மணிக்குள் 3 நகல்களில் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1, இணைப்பு - 2, இணைப்பு - 3, இணைப்பு - 4, இணைப்பு - 5

 03.01.2022      // தேர்வுகள்// மிக மிக அவசரம் // தனி கவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு.

Sunday, 2 January 2022

 03.01.2022                                            //நினைவூட்டல் - 2// திருத்தப்பட்டது//

                          // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் //  தனி கவனம் //                                                                           

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10 ஆம் வகுப்பு ) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12 ஆம் வகுப்பு) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை 05.01.2022 க்குள் முடித்து  print for Dispatch  நகலை திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 05.01.2022 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன்  நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் 3 நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இறுதி நாள் 05.01.2022 காலக் கெடுவிற்குள் புதுப்பித்தல் செய்யப்படவில்லையெனில் அதற்கான முழு பொறுப்பினையும் அப்பள்ளித் தலைமை ஆசிரியரையே சாரும் என்றும் மாணாக்கர்கள் சார்பான கல்வி உதவித் தொகையினை பள்ளி நிர்வாகமே ஈடுசெய்யக்கொள்ள நேரிடும்  என்ற விவரம்  சார்ந்த அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பு: SC/ST/SCC மாணாக்கர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் எண், நீண்ட நாள் விடுப்பு ஆகிய விவரங்களை பள்ளி Office Login ID இல் சரிபார்த்துக்கொள்ளவும் விரைவில் SUBMIT BUTTON  அனுமதிக்கப்படும்.

இணைப்பு1  இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5

Thursday, 30 December 2021

30.12.2021        // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் //  தனி கவனம் //                                                                             //நினைவூட்டல் - 1//

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை முடிக்க 20.12.2021 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இப்பணியை எந்த வித பிழையில்லாமல் செம்மையாக முடித்து  print for Despatch  நகலை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 31.12.2021 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன்  நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     மேலும் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5


 30.12.2021  // TRUST EXAM//

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஊரகத்திறனாய்வு தேர்வு பிப்ரவரி 2022   இல் நடைபெறுதல் - விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பு தொடர்பான   இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Tuesday, 28 December 2021

 29.12.2021  // மிக அவசரம் தனி கவனம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவு / மெட்ரிக்பள்ளி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

2021- 2022 ஆம் ஆண்டிற்கான NSP MINORITY SCHOLARSHIP ( தேசிய கல்வி உதவித்தொகை )  இணையதளத்தில் பதிவு செய்த  புதுப்பித்தல் (RENEWAL)  மாணவர்களின் விவரங்களை ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தெரிவித்துள்ளவாறு  புத்தக வடிவத்தில் கோரப்பட்டதற்கிணங்க உரிய விவரங்களை  லிகல்  தாள் ( LEGAL SHEET    LAND SCAPE)  நகல் எடுத்து இரு நகல்கள் இவ்வலுவலக  அ4 பிரிவில் இன்று ( 29.12.2021 ) மாலை 05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

 28.12.2021  // தேர்வுகள் // 

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்களின்  கவனத்திற்கு –

 தேர்வுகள் – 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2021-2022-கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன அதற்கான தேர்வுகால அட்டவணைகள்  இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான (குறைக்கப்பட்ட) பாடத்திட்டம்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

    மேற்காணும் விவரத்தினை  அனைத்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தேர்வுகள் நடத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்கள் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு. அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு1 . இணைப்பு2 இணைப்பு3

Monday, 27 December 2021

 28.12.2021        // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் // 

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை முடிக்க 20.12.2021 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இப்பணியை எந்த வித பிழையில்லாமல் செம்மையாக முடித்து  print for Despatch  நகலை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 31.12.2021 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன்  நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     மேலும் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்புஇணைப்பு3


 28.12.2021  // நிதியுதவி பெறும் பள்ளிகள் மட்டும்//

அனைத்து  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அறக்கட்டளைகள் குறித்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Friday, 24 December 2021

 

24.12.2021  EMIS  //தேர்வுகள் அவசரம்//

நினைவூட்டல் -1

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக 20.12.2021 வரை கால அவகாசம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டது,

அவ்வாறு EMIS-ல் பதிவேற்றம் செய்யபட்ட மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அதன் நகலினை EMIS-ல் இருந்து பதிவிறக்கம் செய்து                  இவ்வலுவலக தேர்வுத்துறை பிரிவில் 28.12.2021  மாலை 4 மணிக்குள் முகப்பு கடிதத்துடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு

 

அனைத்து வகை அரசு/நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ கவனத்திற்கு

IFHRMS புதிய பணியிடம் சேர்ப்பது குறித்து கோரிக்கை இருப்பின் அதற்கான அரசாணைகள் /ஆணைகளை இணைத்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  மாவட்ட கல்வி அலுவலரின் கையொப்பத்துடன்  இணைத்து பள்ளிக்கல்வி ஆணையராக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு படிவத்தினை dsefc@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், அதன் நகலினை 28.12.2021 மாலை 5 மணிக்குள் இரு நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களூக்கும் தெரிவிக்கலாகிறது.இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க்கநேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.இணைப்பு


Thursday, 23 December 2021

 24.12.2021            //தேர்வுகள்//


அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.


 தேர்வுகள் – நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு எழுதி,மறுகூட்டல்- 2   (Re-total-II)   மற்றும் மறுமதிப்பீடு.  (Revaluation)   கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் (Notification  பகுதியில்)  27.12.2021 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவுகளுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (statement of marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு