Tuesday, 30 November 2021

 01.12.2021  // தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - 2017 -18 முதல் 2020 -2021 க்கான  பிரீ மெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக்  - தணிக்கைக்கான  ஆவணங்கள் தயார் நிலையில் வைத்தல் -  9 ஆம்  வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு  SC/ST  க்கான கல்வி உதவித்தொகை 2017 -2018  முதல் 2020-2021 ஆம் ஆண்டில் பிரீமெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை பெற்றதற்கான தணிக்கை விரைவில் மேற்கொள்ள இருப்பதால் அனைத்து வகை பள்ளிகளும் கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பராமரிக்க வேண்டிய ஆவணங்கள்

1. விண்ணப்பப்படிவம்

2. சாதிச் சான்று

3. வருமானச் சான்று

4.மாணவர்களின் வங்கி புத்தக நகல்

5.ஆதார் நகல் 

6.பள்ளி தலைமையாசிரியர் இணையதளத்தில் விண்ணப்பித்ததற்கான  பதிவிறக்கம் (proceedings copy / sanction copy )

இணைப்பு1 இணைப்பு2

Monday, 29 November 2021

 29.11.2021        //தேர்வுகள்// 

அனைத்து உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி / மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி / சிபிஎஸ்சி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு,

தேசிய திறனாய்வு தேர்வு (NTS) விண்ணப்பித்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 12.11.2021 பிற்பகல் முதல் 27.11. 2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என்பதை தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Thursday, 25 November 2021

 25.11.2021      // மிக அவசரம் //

அனைத்து அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நிர்ணயம் செய்யும் பொருட்டு இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை 26.11.2021 பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு  அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை 26.11.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 25.11.2021                 மிக மிக அவசரம்,  //தேர்தல் அவசரம்//

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தேர்தல் படிவங்களை இன்று இரவுக்குள் ONLINE இல் பதிவேற்றம் செய்யுமாறு ELECTION  PA  அவர்களிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியை  விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, 24 November 2021

 24.11.2021       // அவசரம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை  பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை எனவே 24.11.2021 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு


1. அ.மே.நி.பள்ளி, மிட்டூர்.

2. உபைபாஸ் பெண்கள் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

3.உஸ்மானியா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

4. அ.(பெண்கள்) உ.நி.பள்ளி, மிட்டூர்.

5. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.

6. அ.உ.நி.பள்ளி, அசோக் நகர்.

 24.11.2021                 //தேர்வுகள்//தனி கவனம்

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஊரகத் திறனாய்வு தேர்வு ( TRUST EXAMINATION) JANUARY 2022 -  நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றி 09.12.2021 முதல் 20.12.2021 வரை பதிவேற்றம் செய்யுமாறு   கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு - 2 இணைப்பு - 3

 24.11.2021

அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில்  உள்ள ONLINE  படிவத்தில் தங்கள் பணிபுரியும்  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியாளர் விவரங்களை பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள்  அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

Tuesday, 23 November 2021

 23.11.2021                       நினைவூட்டல் - 1  // மிக மிக அவசரம் //

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர் அடிப்படை பயிற்சி பெற பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)   அனுப்பிவிட்டு   அதன் நகலினை தனிநபர் மூலம்  மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Monday, 22 November 2021

 23.11.2021  

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர் அடிப்படை பயிற்சி பெற பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 22.11.2021       // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நாளை 23.11.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) அனுப்பிவிட்டு Hard Copy யை தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்ட பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 


நகல்: 

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.

 

22.11.2021              மிக மிக அவசரம் – தனிகவனம் –

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –

பழங்குடியினர் நலம் - நரிக்குறவர், பழங்குடியினர், இருளர் மற்றும் இதர பழங்குடியின விளம்பு நிலை மக்களின குழந்தைகளின் விவரங்கள்  இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து  நாளை 23.11.2021 காலை 10.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரு நகல்களை தனி நபர் மூலம்  இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Sunday, 21 November 2021

 22.11.2021

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மழை நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகள் தொடர்பாக - இணைப்பில் கண்டுள்ள ONLINE  படிவத்தை இன்று  காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

Friday, 19 November 2021

20.11.2021   (திருத்தப்பட்டது)  // மிக அவசரம் //

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் இன்று 20.11.2021 பிறபகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 



19.11.2021  // தேர்வுகள் // அவசரம்// தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு, EMIS இல்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள்  மற்றும் விவரங்களை பதிவு செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் விவரங்களையும் EMIS PORTAL இல் சென்று சரிபார்த்து, திருத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும், பெயர்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமை ஆசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும், மேற்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.மேலும், பதிவேற்றம் செய்த விவரங்களை சரிபார்த்து, இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களான மொழிப்பாட விலக்கு, செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான செய்திகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இணைப்பு

Thursday, 18 November 2021

19.11.2021   

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் 20.11.2021 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 



 19.11.2021   

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாற்றுத்திறனாளிகள் நலன் - திருப்பத்தூர் மாவட்டம் - மத்திய அரசின் Rastriya Vayosri Yojana ( ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட தங்கள் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் மற்றும் Assistance to Disabled Persons (ADIP) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குதல்  தொடர்பாக பயனாளிகள் தேர்வு மருத்துவ முகாம் நடைபெறுதல் தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அனைவருக்கும் கல்வி சிறப்பாசிரியர்களை உரிய அப்பகுதி மாற்றுத்திறனாளிகளுடன் இணைப்பில் உள்ள பட்டியலின் படி முகாமில் பங்கேற்று  மருத்துவ முகாமிற்கு வர உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1  இணைப்பு - 2

 19.11.2021                //தேர்வுகள்//

அனைத்து அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆகஸ்ட் - 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/மதிப்பெண் பட்டியல்களை 25.11.2021 வியாழக்கிழமை முதல், அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இணைப்பு

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, 17 November 2021

 

18.11.2021    // தேர்வுகள்// 

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

செப்டம்பர் 2021,  பத்தாம் வகுப்பு  துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் ( தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை 19.11.2021 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே  பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தான செய்தி குறிப்பு தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2 

குறிப்பு:   இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 17.11.2021        // மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / சுயநிதி (மெட்ரிக் / சிபிஎஸ்இ) உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மேற்காண் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவ / மாணவியர் எண்ணிக்கையை வருகைப்பதிவேட்டின் படி அசல் வருகைப்பதிவேட்டை முன்னிலைப்படுத்தி EMIS Portal - இல் ஒப்பிட்டு இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து ஆசிரியர் பயிற்றுநர்களிடம் சரிபார்த்து அவர்கள் ஒப்புதலுடன் இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 

17.11.2021              அவசரம் – தனிகவனம் –

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –

இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை (18.11.2021)  காலை  11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரு நகல்களை தனி நபர் மூலம்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு