Sunday, 28 February 2021

 01.03.2021   // தேர்தல்2021  - மிக மிக அவசரம்  //

அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின்  கவனத்திற்கு 

தேர்தல் - 2021 நடைத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

01.03.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் விரைந்து  இணைய தளத்தில் விண்ணப்பித்தும் அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு- 1  இணைப்பு - 2

 01.03.2021     நினைவூட்டல் - 02  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று (01.03.2021) மாலை 05.00  மணிக்குள்   குறுந்தகட்டில் பதிவு செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

Friday, 26 February 2021

 27.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Thursday, 25 February 2021

26.02.2021         // மிக மிக அவசரம் // கூடுதல் தகவல் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் ஊக்குவிப்புத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம்  2  நகல்களில் (Nationalized Bank Pass Book Xerox 2 Copy )   இந்நாள் வரை இவ்வலுவலகத்தில்  சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள்  சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இணைப்பில் உள்ள புதிய படிவத்தில் (Excel Format ) தமிழில் பூர்த்தி செய்து இதுவரை அனுப்பாத பள்ளிகள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2021 பிற்பகல் 02.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 26.02.2021   // நினைவூட்டல் - 02 //    மிக அவசரம் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 26.02.2021     // +2 தனித் தேர்வர்கள்  - பொதுத்தேர்வுகள் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்  /உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

    நடைபெறவிருக்கும் மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன் லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான  இணைப்பில் காணும் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு  தங்கள் சார்ந்த பகுதி தனித்தேர்வர்களுக்கு தகவல் பலகை மூலம்  அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Instructions1    Instructions2 

 25.02.2021  // தனி கவனம்//

கீழ்கண்ட  அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

STUDENT POLICE CADET - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூபாய் 50,000/- க்கான பயனீட்டு சான்று உடனடியாக வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 26.02.2021 க்குள் தனி நபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளி விவரம் 

1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம் 

2 . அரசு மேல்நிலைப்பள்ளி , வள்ளிப்பட்டு

Wednesday, 24 February 2021

25.02.2021   // நினைவூட்டல் - 01 //    மிக அவசரம் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை EMIS மையத்தில் பதிவேற்றம் செய்து விட்டு இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.02.2021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

24.02.2021       // மிக மிக அவசரம் // கூடுதல் தகவல் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் ஊக்குவிப்புத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம்  2  நகல்களில் (Nationalized Bank Pass Book Xerox 2 Copy )   உடனடியாக வழங்கவேண்டும்.

மேலும் இணைப்பில் உள்ள புதிய படிவத்தில் (Excel Format ) தமிழில் பூர்த்தி செய்து இதுவரை அனுப்பாத பள்ளிகள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.02.2021 பிற்பகல் 02.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Tuesday, 23 February 2021

 24.02.2021     நினைவூட்டல் - 01  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று மாலை 05.00  மணிக்குள்   இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

 23.02.2021   // தேர்வுகள் //

அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில்  14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட சார்ந்த பள்ளி    உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள்  ஆணையை  அ3 பிரிவு அலுவலரிடம் (24.02.2021) பிற்பகல்  முதல்   தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Monday, 22 February 2021

 23.02.2021    // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய படிவத்தில்  செய்து இன்று மாலை 05.00  மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET  ( அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யவேண்டும்) 

 23.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து 22.02.2021 க்குள்  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT1  ATTACHMENT 2

Sunday, 21 February 2021

 22.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து 22.02.2021 க்குள்  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Friday, 19 February 2021

  19.02.2021     // NMMS  தேர்வுகள்//

   NMMS  தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 

19.02.2021  அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட  தேர்வு மையத்தில் OMRSHEET - களை கட்டுக்களாக கட்டி அனுப்பவேண்டிய படிவங்கள்  இணைப்பில் காணும்  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT1 , ATTACHMENT 2 

குறிப்பு. FORMAT 1 AND 2   இரண்டு நகல் ஒப்படைக்கப்படவேண்டும்  

 19.02.2021  

கீழ்க் கண்ட அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க கலந்தாய்வு நடைபெறுவதால் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்தவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

1. அரசு மேல்நிலைப்பள்ளி வெலக்கல்நத்தம்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி கொரட்டி.

3. அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை.

4. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.

5. அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி,

6. அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர்.

7. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாய்க்கன்பட்டி.

8. அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம்பள்ளி.

19.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) / புதுப்பித்தல் (Renewal)  விண்ணப்பங்களை இணை தளத்தில் 19.02.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் விவரம் மற்றும்   இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து   வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

 19.02.2021     நினைவூட்டல் - 1  // மிக மிக அவசரம் // 

அனைத்து  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் பயிலும் 9, 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்துதல் கட்டுரை எழுதுதல் / பேச்சுப்போட்டி  போன்ற திறனறி போட்டிகளை மாணவர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடத்திட போட்டிகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள் விவரத்தை இணைப்பில் உள்ள EXCEL FORMAT  இல்   19.02.2021  11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பள்ளிகளிடமிருந்தும் சரியான தகவல் கிடைக்காத காரணத்தால் தொகுப்பறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இனியும் சுணக்கம் காட்டாமல் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் இன்று 19.02.2021 மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1 இணைப்பு - 2  

Thursday, 18 February 2021

 19.02.2021      // மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களில் 01.12.2019 அன்றைய நிலவரப்படி ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த (ஓட்டுநர் உரிமம் ) பணியாளர்கள் இருப்பின் அதன் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியை இன்று 19.02.2021 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தோர் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு