Wednesday, 10 February 2021

11.02.2021  // மிக அவசரம்//

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு,

நடப்பு கல்வியாண்டில் (2020 - 2021) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் காணும் ONLINE SHEET இல் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

 

10.02.2021    // தேர்வுகள்  NR  தயாரித்தல் //

     2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


குறிப்பு:  மாணாக்கர்களின் பெயர் பட்டியல் தயார் செய்ய கடைசி நாள் 11.02.2021.   எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விரைந்து மாணாக்கர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, 9 February 2021

10.02.2021       //  தனிகவனம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - 9 ஆம் வகுப்பு &  11 ஆம் வகுப்பு  பயிலும் பள்ளி மாணவ / மாணவிகளுக்கு போஸ்ட் மெட்ரிக் & பிரீ மெட்ரிக்  SC / ST  உதவித் தொகை பெற இணைய வழியில் புதியதாக விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2021 மாலை 6.00 மணி என்பதால் விரைந்து இப்பணியை முடித்து அதன் அறிக்கையை தனிநபர் மூலம்  திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு - 1இணைப்பு - 2

 10.02.2021   அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

புதுடெல்லி  Centre for Cultural Resources and Training  என்ற பயிற்சி நிறுவனத்தால்  22.02.2021 முதல் 26.02.2021 வரை நடத்தப்பட உள்ள 5 நாட்கள் இணைய வழி பயிற்சியில் கலந்த கொள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான ஆசிரியர்கள் சார்பான விவரங்களை 15.02.2021 அன்று மாலை 04.30 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு - 1  இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு -4 இணைப்பு - 5

Monday, 8 February 2021

 09.02.2021  // 

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு , பள்ளி வளாகத்தை  தூய்மைப்படுத்துதல்  சார்பான விவரங்கள்  இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர்  மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1   ATTACHMENT 2

 09/02/2021  // தனிகவனம் மிக மிக அவசரம்//  நினைவூட்டல் - 2 //

  இணைப்பில் கண்டுள்ள அரசு / அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

  தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை விவரங்களை இணைப்பில் உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து    09.02.2021 இன்று  பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 2 நகல்களில் நேரில் ஒப்படைக்குமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.        ATTACHMENT    ATTACHMENT 2 

 08/02/2021   // மிக மிக அவசரம்//  

ஆதிதிராவிடர் நலம் -2020-2021 - போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் தனிகவனம் செலுத்தி இன்றே இணைய வழியில் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முடிக்கப்பட்ட விவரத்தினை தனிநபர் மூலம் இன்று மாலை 4.30 மணிக்குள்  இவ்வலுவலக  5 பிரிவில்  மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்திலும் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

மேலும் Principal Level Login - இல் Submit செய்து விட்டு Office Login - இல் Print & distpatch  எதை Option - இல்  Print  எடுத்து தனி நபர் மூலம் இன்று மாலை 5.00  மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 08.02.2021              // தேர்வுகள்  //மிக மிக அவசரம்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள  சலுகை கோரும்  மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து 3 நகல்களில் அ3 பிரிவு அலுவலரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்க   அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் 1 படிவம் 2  ATTACHMENT 3

குறிப்பு .

1. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 1 மற்றும் 2   (3 நகல்)

2 . சலுகை கோரும் மாணவர்/ பெற்றோரின் விண்ணப்பம் (3 நகல்)

3 . மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகல் (3 நகல்)

4 . தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் ( 2 நகல் )

5 . மருத்துவச் சான்று 

Sunday, 7 February 2021

08.02.2021     // மிக மிக அவசரம் //

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

NMMS -  உதவித்தொகை   - 2009 - 2010 ( NMMS தேர்வு  ஆண்டு 2008) முதல் 2017 - 2018 ( NMMS  தேர்வு  ஆண்டு  2016 ) வரை  இணைய  வழியில்  அல்லாமல் Offline  இல் விண்ணப்பித்து இது வரை  NMMS  உதவித்தொகை  வழங்கப்படாமல்  விடுப்பட்ட  இணைப்பில் உள்ள மாணவ / மாணவியர்களின் வங்கி கணக்கு விவரங்கள் திரும்பவும் சரியான தகவல் இல்லை என கடிதம் பெறப்பட்டது. எனவே, இணைப்பில் உள்ள மாணவ / மாணவியரில் நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை திருத்தி deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை காலை 11.00 க்குள் அனுப்புமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

மேலும்  2018 - 2019 மற்றும்  2019-2020  ஆம் கல்வியாண்டுகளில்  சில  காரணங்களினால்  Online - ல்  Fresh Application   போடாமல்  விடுப்பட்ட மாணவ / மாணவிகளின் விவரங்களையும் மேற்படி  மின்னஞ்சல்  முகவரிக்கு  அனுப்பிவைக்குமாறு  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்    படிவம்  


  08.02.2021  நினைவூட்டல் - 01  // காமராஜர் விருது // மிக மிக அவசரம் //

 

2019 -2020 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகிணங்க 10  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் ,  12  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் , மதிப்பெண் வாரியாக இணைப்பில் கண்டுள்ள படிவம் 2 ல்  மாணக்கர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வானவில் அவ்வையார் FONT ல்  ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள்  இன்று (08.02.2021)  பிற்பகல் 02.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

Friday, 5 February 2021

 05.02.2021   // ஊதியம் தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பிப்ரவரி 2021 ஆம் மாத ஊதியம் சார்பான விவரங்களை (வருமானவரி பிடித்தம் உட்பட ) இணைப்பில் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகளின் படி செயல்பட அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.ATTACHMENT 

  05.02.2021  // மிக மிக அவசரம் தனிகவனம்//

NMMS- 2014 - 15 , 2015 - 16 & 2016-17  ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவித்தொகைக்காக  விண்ணப்பித்திருந்த இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் இணைப்பில் உள்ள  EXCELSHEET படிவத்தில் ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு 06/02/2021 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 1 இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 

Thursday, 4 February 2021

 05.02.2021  // காமராஜர் விருது // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகிணங்க 10  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் ,  12  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் , மதிப்பெண் வாரியாக இணைப்பில் கண்டுள்ள படிவம் 2 ல்  மாணக்கர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாணவில் அவ்வையார் FONT ல்  ஆன் லைன் படிவத்தில் இன்று (05.02.2021)  பிற்பகல் 02.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

 05.02.2021   அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

    IFHRMS வரவு செலவுத் திட்டம் – 2020 –  அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான மின்கட்டணம்/பயணப்படி / அஞ்சல் வில்லை/ அலுவலக செலவினம் திருத்த மதிப்பீடு  ( Revised Estimate) நிதி ஒதுக்கீடு IFHRMS இல் பகிர்ந்தளித்தல்  31.03.2021 க்குள் செலவினம் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு 

 04.02.2021

NMMS- 2014 - 15 , 2015 - 16 & 2016-17  ஆம் கல்வியாண்டுகளில் கல்வி உதவித்தொகைக்காக  விண்ணப்பித்திருந்த இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் இணைப்பில் உள்ள  EXCELSHEET படிவத்தில் ல் பூர்த்தி செய்து deotpt2015 @gmail.com  என்ற முகவரிக்கு 08.02.2021 மாலை 5.00 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரிதியை இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 1 இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 

 04/02/2021  // மிக மிக அவசரம் //

சிறுபாண்மையினர் நலம் 2020 -2021 இணைப்பில் உள்ள சிறுபாண்மையினர் மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பித்து INSTITUTE LEVEL  ல்  VERIFICATION  நாளை (05.02.2021 ) காலை 11.00 மணிக்குள் முடித்து அதன் அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மற்றும் இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவிகள் தான் என உறுதி செய்துவிட்டு VERIFY  செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT 

 04/02/2021   // மிக மிக அவசரம்//  

ஆதிதிராவிடர் நலம் -2020-2021 - போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் தனிகவனம் செலுத்தி இன்றே இனைய வழியில் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முடிக்கப்பட்ட விவரத்தினை தனிநபர் மூலம் இன்று மாலை 4.30 மணிக்குள்  இவ்வலுவலக  5 பிரிவில்  மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்திலும் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

குறிப்பு - The Renewal Pending schools HMs are requested to come to Adi Dravidar and Tribal Welfare Office, Vellore on tomorrow @ 11.30 AM with User ID & Password for completing Renewal process.

 04.02.2021  // காமராஜர் விருது // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகிணங்க 10  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் ,  12  ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணாக்கர்களின் பெயரிணையும் , மதிப்பெண் வாரியாக இணைப்பில் கண்டுள்ள படிவம் 2 ல் ஆன் லைன் படிவத்தில் இன்று மாலை 05.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

Wednesday, 3 February 2021

 04.02.2021    // தேர்தல் 2021 அவசரம் // 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி  அலுவலரின் கடிதத்தின் படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2021 ல் பணியாற்றிட அரசு / நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும்  பணியாளர்கள் / ஆசிரியர்களில் ஏற்கனவே அனுப்பப்பட்டவர்கள் போக ஏவரது பெயரும் விடுபடாமல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் இன்று (04.02.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT2  

 04.02.2021              // தேர்வுகள்  //

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள  சலுகை கோரும்  மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து 3 நகல்களில் அ3 பிரிவு அலுவலரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்க   அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் 1 படிவம் 2  ATTACHMENT 3

குறிப்பு .

1. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 1 மற்றும் 2   (3 நகல்)

2 . சலுகை கோரும் மாணவர்/ பெற்றோரின் விண்ணப்பம் (3 நகல்)

3 . மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகல் (3 நகல்)

4 . தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் ( 2 நகல் )

5 . மருத்துவச் சான்று