Saturday, 31 October 2020

03.11.2020  அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் கட்டாய உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தி அறிக்கை அளிப்பது சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றிட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் செய்திடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

அட்டைகள் வழங்கப்பட உள்ள மையம்.

சிறு விளையாட்டு அரங்கம் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

நாள் :  09.11.2020.

 

31.10.2020       நினைவூட்டல் – 01     //  மிக அவசரம் //  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  இதுவரை பூர்த்தி  செய்யாமல்  உள்ள பள்ளிகள் தங்கள்  பள்ளி சார்பான விவரங்களை  இன்று  மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET

 31.10.2020 

  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இலவச பேருந்து பயணஅட்டை -2018 - 2019 & 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய  விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  02.11.2020  மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com )  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 . ATTACHMENT2 

Friday, 30 October 2020

31.10.2020 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

NMMS  - மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான கல்வி உதவித் தொகை 4789 தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் இணைப்பில் உள்ள 866 மாணாக்கர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததால் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் பெயர்களை கண்டறிந்து தற்போது நடைமுயைில் உள்ள வங்கி கணக்கு விவரம் மற்றும் இதர விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து EXCEL - FORMAT இல் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.11.2020 மாலை 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3.

Thursday, 29 October 2020

 29.10.2020

 அனைத்து வகை அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் கண்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க 10.03.2020 க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத்தேர்வு பாகம்  - 1  தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதியம் பெறாத  இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - II பணியாளர்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் 02.11.2020 காலை 10.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1. ATTACHMENT 2 

 29.10.2020

 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சிறு சேமிப்பு - 2020 -2021 ஆம்  ஆண்டின் உலக சிக்கன நாள் விழா - 30.10.2020 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி இணைப்பில் உள்ள  போட்டிகள் நடத்திட அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Wednesday, 28 October 2020

 29.10.2020  // மிக மிக அவசரம் //

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

உடற்கல்வி ஆசிரியர்கள் நேரடி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் முறையான ஊதிய விகிதத்தில்  அனுமதிக்கப்பட்ட  உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் நகலினை இன்று மாலை 04.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ2  பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லாத பள்ளிகள் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 29.10.2020 

 அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பள்ளி சார்பான விவரங்களை 2020- 2021ஆம் கல்வியாண்டிற்கான  ஆன் லைன் படிவத்தினை  இன்று காலை 12.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  ஆன் லைன் படிவத்தினை நீக்கம் செய்யவோ   மாற்றம் செய்யவோ கூடாது என தெரிவிக்கலாகிறது.   ONLINE SHEET 

 28.10.2020 

 அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பள்ளி சார்பான விவரங்களை  ஆன் லைன் படிவத்தினை நாளை காலை 11.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

 28.10.2020   //நினைவூட்டல் - 1//

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் தாளாளர்கள் கவனத்திற்கு

 2020 -2021  ஆம் கல்வியாண்டில் புதியதாக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் பெறப்பட்ட பள்ளிகள் மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்கள் மாற்றம் குறித்த விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.10.2020 அன்று மதியம் 02.00 மணிக்குள்  தனி நபர் மூலம்  அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 28.10.2020 

 அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

தேசிய ஒற்றுமை தினம் - சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான 31.10.2020 அன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்க இணைப்பில் உள்ள உறுதி மொழியை  11.00 மணிக்கு எடுத்திட  அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Tuesday, 27 October 2020

 27.10.2020   அனைத்து வகை  மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை - ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோரியமை - மீண்டும் 19.10.2020 முதல் தணிக்கை நடைபெற உள்ளதால் இணைப்பில் கோரிய விவரங்களை காலதாமதமின்றி உடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறு அனைத்து வகை  மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 27.10.2020

 அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை - 10 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வி தகுதிகளை அந்தந்த பள்ளிகளில் ஆன் லைன் வாயிலாக பதிவு செய்தல் சார்பாக  USERID PASSWORD  கீழ்கண்ட இணைப்பில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது. ATTACHMENT ATTACHMENT 

Monday, 26 October 2020

 27.10.2020

 அரசு / நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 NEET  2021 -  2020  நவம்பர் 01 முதல்  தொடங்கப்படவுள்ள இலவச ஆன் லைன் வகுப்பு சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 27.10.2020

 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  நடவடிக்கை மேற்கொள்ள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 

 27.10.2020    அனைத்து வகை அரசு/ நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித்  தலைமைஆசிரியர்கள் மற்றும்  தாளாளர்கள் கவனத்திற்கு,

வருகின்ற 02.11.2020 மற்றும் 03.11.2020 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் ஸ்ரீமீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள முகாமில் ஊக்க ஊதியம் சார்பான விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முழு வடிவில்   தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் /   தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday, 22 October 2020

 23.10.2020    // தனி கவனம் //

அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021  ஆம் நிதியாண்டிற்கு 220202109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் பண்டிகை முன் பணம் மற்றும் மின்கட்டணம் தேவைப்பட்டியல் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தாமதமாக பெறப்படும் தேவைப்பட்டியலுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது  என்பதையும்  திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. 

 22.10.2020  

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் வானியம்பாடியில் 2020 -2021  ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள், தற்போது 10 வகுப்பு துனணத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள் பயன்பெறும் வகையில் இணைப்பில் கண்ட கடிதத்தினை பள்ளி தகவல் பலகையில்  ஒட்டவேண்டும். மேலும்  மாணவர்களின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு நேரடியாக அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம்  ஒப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  

 22.10.2020  

அனைத்து வகை மெட்ரிக் பள்ளி தாளாளர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டின் புதியதாக 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பள்ளிகள்  அதன் விவரங்களை  இவ்வலுவலக அ3 பிரிவில் நாளை (23.10.2020 ) மாலை 03.00 மணிக்குள் 2 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  22.10.2020    // நினைவூட்டல் - 5 //

NMMS - உதவித்தொகை - 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் NMMS உதவித்தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ / மாணவிகளின் விவரங்களை NSP இணையதளத்தில் இதுநாள் வரை (FRESH ENTRY - RENEWAL ) பதிவேற்றம் / புதுப்பித்தல்  பணிமுடிக்காமல் இருக்கும் பள்ளிகள் 31.10.2020 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் INSTITUTE LEVEL இல் VERIFY  செய்துவிட்டு விண்ணப்பித்ததற்கான REPORT  ஐ இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT        ATTACHMENT