Tuesday, 4 August 2020


04.08.2020  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பான செய்திகள் அனுப்பவும், உடனுக்குடன் தகவல்கள் பெறும் பொருட்டு 2018ஆண்டு BSNL CUG  SIM வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணம் ரூ.1400/- சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலத்தில் 06-08-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் தற்போது வருடாந்திர கட்டணம் செலுத்தாத சூழ்நிலையினால் தற்காலிகமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. தாங்கள் செலுத்தும் வருடாந்திர கட்டணத்திற்கு உரிய இரசீது BSNL  நிறுவனத்திலிருந்து பெற்று தங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி புதுபித்தபின் கீழ்க்காணும் வசதிகள் இந்த இணைப்பு  மூலம் பெற்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1. BSNL CUG இணைப்பில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களிடமும் எவ்வித கட்டணமும் இன்றி ஒருவருடத்திற்கு  அழைப்புகள் மூலம் அலைபேசியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. நாள் ஒன்றுக்கு  1 GB  இணையதளவசதி வழங்கப்பட்டுள்ளது. (சென்ற ஆண்டு மாதத்திற்கு 1 GB வழங்கப்பட்டுள்ளதை தற்போது மாற்றம் செய்து பெறப்பட்டுள்ளது.)

3. நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்தி எவ்வித கட்டணமும்மின்றி அனுப்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மேற்கண்ட செயல்முறையினை பின்பற்றி செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Monday, 3 August 2020

04.08.2020  அனைத்து  அரசு/அரசு நிதியுதவி/ உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


PTA - 5%  - 2019-20 - ஆம் ஆண்டு செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகள் மட்டும்  இன்று மாலைக்குள் செலுத்தி உரிய இரசீது பெற்று செல்ல தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் CUG கட்டணம் செலுத்தாத அனைத்து பள்ளிகளும் இன்றே உரிய கட்டணம் அல்லது வங்கி வரைவோலை செலுத்துமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
03.08.2020
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு 

  அரசு நலத்திட்டங்களின் கீழ் SC/ST மற்றும் BC,MBC  மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகையில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கியது போக (அ) வழங்க இயலாத நிலுவையில் உள்ள தொகைகளை இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி அதிகப்படியாக பெறப்பட்ட தொகையினை அரசுக்கணக்கில் திரும்ப செலுத்தும் நேர்வுகளின் இணைப்பில் உள்ள கணக்கு தலைப்பின் கீழ் செலுத்தப்படவேண்டும் என அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை நடப்பு கல்வி ஆண்டு முதல் தவறாமல்  பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

03.08.2020 நினைவூட்டல் -1


அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் - இணைப்பில் உள்ள கடிதத்தின்படி 2020-21 ஆம் கல்வியாண்டு முதல்  பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவியர்களுக்கும் (எந்த ஒரு மாணவியரும் விடுபடமால்) ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு எண் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1  ATTACHMENT2


Sunday, 2 August 2020

03.08.2020
அனைத்து வகை சுயநிதி நர்சரி& பிரைமரி  / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கான கூட்டம் , திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் இணைப்பில் உள்ள  அட்டவணை படி நடைபெற உள்ளதால்  COVID - 19   வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி  அனைவரும் முககவசம்  தவறாமல் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன், ,இணைப்பில் உள்ள படிவங்களை இரு நகல்களில் பூர்த்தி செய்து கூட்டத்தில்   கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1  ATTACHMENT2 


Thursday, 30 July 2020

31.07.2020
 அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப்பைகளை இணைப்பில் உள்ள அரசாணையில் தெரிவித்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) பின்பற்றி 03.08.2020 முதல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT1 ATTACHMENT 2
30.07.2020             மிக அவசரம் // தனி கவனம் //  
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

30.07.2020 ன் படி தங்கள் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிட விவரம் (NON TEACHING STAFF) பதவி வாரியாக (நேர்முக உதவியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் வரை)  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 31.07.2020 காலை 11 மணிக்குள்   தனி நபர் மூலம் நேரடியாக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.காலிப்பணியிடம் இல்லை எனில் இன்மை அறிக்கை கட்டாயம் கொடுக்கவேண்டும் . ATTACHMENT

Wednesday, 29 July 2020

30.07.2020    // தனிகவனம் //    (REVISED)

  அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 பள்ளிக்கல்வி - வரவு செலவு திட்டம் -43-03-2021-  2022  ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டில் ( NUMBER STATEMENT ) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விரங்கள் தயாரித்தல் இணைப்பில் கண்ட செயல்முறைகள் படி செயல்பட  அனைத்து தலைமை  ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கப்படுகிறது. படிவங்கள் மற்றும் CD (R/W)  ஒப்படைக்கப்பட வேண்டிய நாள். 31.07.2020  ATTACHMENT - 1,  2202-02-109 AA , 2202-02-109 AZ , 2202-02-109 BC ,  2202-02-109 KH   2202-02-110 AA 



Tuesday, 28 July 2020

28.07.2020
திருப்பத்தூர் வருவாய் மாவட்டம் , திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகளில் துணிச்சல் மிக்க வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கு "கல்பனா சாவ்லா" விருதுக்காக பரிந்துரைக்கப்படவுள்ளது. 
எனவே, இக்கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / நிதியுதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகள் எவரேனும் துணிச்சல் மிக்க வீர தீர செல்களைப் புரிந்திருப்பின் உரிய ஆதாரங்களுடன் 29.07.2019 பிற்பகலுக்குள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ATTACHMENT 

                                                                                      மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                திருப்பத்தூர் 

Monday, 27 July 2020

28.07.2020

அனைத்து  வகை அரசு / அரசுநிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 IFHRMS   தொடர்பான மாவட்ட ஆட்சியர் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது  இக்கூட்டத்தில்   01.08.2020 முதல் 15.08.2020 ஆம் தேதி வரை  SERVER  ல்  இணைப்பில் கண்ட திருத்தங்களை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் செய்து கொள்ளலாம். 
 01.08.2020 முதல் IFHRMS  இல் மட்டுமே பட்டிகள் சமர்ப்பிக்கப்படவேண்டுமென அரசு அறிவித்துள்ளதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பணம் பெறும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
27.07.2020  நினைவூட்டல் - 1
தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்,  இளநிலை உதவியாளர் விவரம் அளிக்காத கீழ்க் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து  விவரங்கள் பெறப்படாத  செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும் .

பள்ளியின் பெயர் விவரம்
1.  அரசு உயர்நிலைப்பள்ளி செவ்வாத்தூர்.
2.  அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகரம்.
3.  அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
4.  அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
5.  அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
6.  அரசு உயர்நிலைப்பள்ளி, ஜம்மனபுதூர் புங்குளம்.
7.  அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.
8.  அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
9. அரசு உயர்நிலைப்பள்ளி, பாரண்டப்பள்ளி.
10. அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக் நகர்.
11. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
12. அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை (ம)
13. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
14. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவுர்.
15.அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகுரும்பதெரு.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி.
18. அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.
19. அரசு மேல்நிலைப்பள்ளி,  வெள்ளக்குட்டை.
20. அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்.
21. அரசு மேல்நிலைப்ள்ளி, புதூர் நாடு 

Saturday, 25 July 2020

25.07.2020
 அனைத்து  அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு தகுதி வாய்ந்த மாணவர்கள் சார்பாக உரிய விவரங்களை  27.07.2020 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் 3 நகல்களில்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday, 24 July 2020

24.07.2020 

தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்,  இளநிலை உதவியாளர் விவரம் அளிக்காத கீழ்க் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியின் பெயர் விவரம்
1.  அரசு உயர்நிலைப்பள்ளி செவ்வாத்தூர்.
2.  அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகரம்.
3.  அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
4.  அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
5.  அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
6.  அரசு உயர்நிலைப்பள்ளி, ஜம்மனபுதூர் புங்குளம்.
7.  அரசு உயர்நிலைப்பள்ளி, என்.எம்.கோயில் 
8.  அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.
9.  அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
10. அரசு உயர்நிலைப்பள்ளி, பாரண்டப்பள்ளி.
11. அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக் நகர்.
12. அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னத்தூர்.
13. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
14. அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை (ம)
15. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
16. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவுர்.
17.அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.
18. அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகுரும்பதெரு.
19. அரசு உயர்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி.
20. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.
21. அரசு மேல்நிலைப்பள்ளி,  வெள்ளக்குட்டை.
22. அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்.
23. அரசு மேல்நிலைப்ள்ளி, புதூர் நாடு 
24.07.2020      அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST/SCC  மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத கீழ் காணும் பள்ளிகள் கடைசி தேதியான 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்  விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது நாள் வரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 ப்ரி மற்றும் போஸ்ட் மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகளின் விவரம்
1.  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
2.  ஜோதி மேல்நிலைப்பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி.
3.  தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி 
4. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
5. வனத்துறை உயர் நிலைப்பள்ளி நெல்லி வாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ் உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
2. ஜோதி உயர்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
5. வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ்  உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

24.07.2020     நினைவூட்டல் -1 

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் வழங்குமாறு ஏற்கனவே பலமுறை நினைவூட்டியும் இணைப்பில் உள்ள சில பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்கவில்லை. இதனால் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மறுநினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

குறிப்பு: 
1. பராமரிப்பு தொகை பெறும் பள்ளிகளும் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறாத பள்ளிகள் இன்மை அறிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


24.07.2020   //மிக மிக அவசரம் //   
அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள்  கவனத்திற்கு,
மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் NMMS  - 2018 - 2019 மற்றும்  2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் இணைப்பில் உள்ள இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட மாணவ /மாணவிகளின் தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் இவ்வலுவலக deottr@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.07.2020 க்குள் அனுப்பிவிட்டு அதன் Hard Copy மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகல்களுடன் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2
குறிப்பு. இத்திட்டத்தில் விடுபட்ட மாணவ /மாணவியர்கள் எவரேனும் இருப்பின் அம்மாணவர்களின் விவரங்களும் கோரப்படுகிறது. 



24.07.2020  அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,
               k¤Âa murhš brašgL¤j¥g£L tU« Fit India Movement rh®ghf www.fitindia.gov.in vD« Ïizajs« cUth¡f¥g£L  nk‰f©l Ïizajs Kftçæš Ï¥bghUŸ rh®ghf mid¤J gŸëfS« Fit India School Certificate Fit India Flag Schools With either 3 Star of 5 Star Rating  ngh‹w étu§fis cŸÇL brŒÍkhW mid¤J tif gŸë¤ jiyik MÁça®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
               nkY« Fiwªj mséyhd gŸëfŸ k£Lnk Ïizajs¤Âš gÂnt‰w« brŒÂU¥gJ bjçatU»wJ. vdnt ÏJtiu  nk‰f©l Ïizajs¤Âš gÂnt‰w« brŒahj gŸëfŸ cl‹ gÂnt‰w« brŒJ mj‹ étu¤Âid 24.07.2020  khiy 04.00 kâ¡FŸ Ï›tYtyf¤Âš x¥gil¡FkhW   nf£L¡bfhŸs¥gL»wh®fŸ. Ïiz¥ò


24.07.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,

மாநில நல்லாசிரியர் விருது 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதா கிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர் /ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 27.07.2020 திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2 ATTACHMENT - 3
24.07.2020    அனைத்து வகை அரசு மற்றும் அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


பள்ளிக் கல்வி - விலையில்லா பாடநூல்கள் - இணைப்பில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர்களுக்கு    2020 - 2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை படிவம் 1 மற்றும் படிவம் 2 ல் பூர்த்தி செய்து  நாளை  25.07.2020  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு கையொப்பமிட்ட நகலினை தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் /  மேல்நிலைபள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT

Monday, 20 July 2020

21.07.2020
 அனைத்து  அரசு /நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
23.07.2020 க்குள் பழைய " e.pay roll " முறையிலேயே சம்பள பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்