Tuesday, 24 March 2020

24.03.2020
 அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு
மார்ச் மாத EPAYROLL   சம்பள பட்டியல் மற்றும் IFHRMS  சம்பளம் பட்டியலுடன் ஒப்பீடு செய்து வரும் 05 APR 2020  க்குள் சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளிக்கிறேன் , என்ற கடிதத்துடன் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் தரப்படும் என்பதை உதவி கருவூல அலுவலர்   தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவர்களும் மேற்கண்ட சான்றுடன்,  மார்ச் 2020 க்கான சம்பளபட்டியல்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

                                                                                           மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                         திருப்பத்தூர்.

Monday, 23 March 2020

24.03.2020    G.O.(Ms). No.152
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

Corona Virus Disease (COVID-19) - Infection Prevention and Control - The Epidemic Diseases ACT, 1897 ( Central Act No.3 of 1897) - Regulations - Notification - Issued  ATTACHMENT 
23.03.2020  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நபார்டு திட்டம் : கடந்த 3 ஆண்டுகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
23.03.2020  // மிக மிக அவசரம் //
 அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்  விவரங்கள்  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று ( 23.03.2020 )  பிற்பகல் 03.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில்  தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Sunday, 22 March 2020

23.03.2020      //தேர்வுகள் அவசரம்//    இடைநிலைப்பொதுத் தேர்வு //

 அனைத்து  வகை   தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் / ஏப்ரல் 2020  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒத்தி வைத்தல் - சார்பான இணைப்பில் கண்ட   அரசுத் தேர்வு இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
23.03.2020       // தேர்வுகள் அவசரம்//
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் - ஒத்திவைத்தல் 

 இடைநிலைப்பொதுத் தேர்வு மார்ச் 2020 
அந்தந்த தேர்வு மையங்களில் இன்று பிற்பகல்  நடைபெறுவதாக இருந்த  அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நாள் பின்னர் அறிவிக்கப்படும்    

                                                                     மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                    திருப்பத்தூர்.
23.03.2020  //தேர்வுகள் அவசரம்//
 அனைத்து  தேர்வு மைய  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday, 20 March 2020

20.03.2020
 அனைத்து  அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

தங்கள் பள்ளி/ அலுவலகத்தில்  பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும்  தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - 15.03.2020 நிலவரப்படி  தகுதிபெற்ற பணியாளர்கள் 31.03.2013  வரை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணி நியமனம் பெற்றவர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து  3 நகல்களில் 26.03.2020 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1 ATTACHMENT2
20.03.2020     //தேர்வுகள்//
அனைத்து வகை   தேர்வு மைய  தலைமை  ஆசிரியர் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு - வரலாறு பாடத் தேர்வு - தேர்வர்களுக்கு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல் குறித்த இணைப்பில் கண்ட   அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday, 19 March 2020

20.03.2020  // தேர்வுகள் //
 அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு சமூக அறிவியல் பாடத்தேர்வு - தமிழ்மொழி பாடத்தேர்வு - கணித பாடத்தேர்வு - தேர்வுகளுக்கான வரைபடம் மற்றும் வரைக்கட்டத்தாள் பெற்றுச் செல்ல தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT 

Wednesday, 18 March 2020

19.03.2020
 அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் 2020 - தேர்வு  அறை  கண்காணிப்பாளர்களுக்கான ஆணையினை இன்று (19.03.2020 )  03.00 முதல் 04.00 மணிக்குள் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
18.03.2020  // தேர்வுகள் //
 அனைத்து வகை மேல்நிலை  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 
மார்ச் 2020 - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில் புதிய பாடத்திட்டத்தில்  வரலாறு பாட தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வழங்கும் முதன்மை விடைத்தாட்களுடன் ஓர் இந்திய வரைபடத்தினையும் ஓர் உலக வரைபடத்தினையும் வைத்து 
  தைக்கப்பட்டுள்ளதா என்பதை மீளவும் உறுதி செய்து கொள்ளவும்   இணைப்பில் உள்ள அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களின்   அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
18.03.2020    // தேர்வுகள் // 

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020   முதன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கூட்டம்   திருப்பத்தூர் டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 அன்று பிற்பகல் 03.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில்  மேற்காணும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
18.03.2020
 அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

 பத்தாம் வகுப்பு (இடைநிலை) பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 க்கான இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு அறைக்கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி  திருப்பத்தூர் டோமினிக் சாவியோ  மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 வியாழன் அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் . எனவே, இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
18.03.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தற்போது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் நாளன்று நகராட்சி / மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு துவங்குவதற்கு முன்பாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும் . மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் /  Hand Sanitizers  மூலம் சுத்தம்  செய்துகொள்ளவும் தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் / தேர்வு மைய முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பள்ளியின் தலைமை ஆசிரியர்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Tuesday, 17 March 2020

17.03.2020   /// மிக மிக அவசரம்//
 அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 
 பள்ளிக்கல்வி வழக்குகள் - இடைநிலைக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒப்புதல் வழங்க கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு இதர பணப்பலன்கள் கோரியவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 2 நகல்களில்  இன்று பிற்பகல் 04,00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
17.03.2020   // தேர்வுகள் அவசரம்//
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு மார்ச் / ஏப்ரல் 2020 பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு -PART -1  மொழிப்பாடம் மற்றும் விருப்ப மொழிப்பாடம்  PART - IV  போன்றவற்றில் தேர்வு கூட நுழைவுச்சீட்டில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதனை தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday, 16 March 2020

17.03.2020   // பள்ளிகளுக்கு விடுமுறை //
அனைத்து வகை  அரசு/ நிதியுதவி/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை / பிரைமரி / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்டங்கள்- அனைத்து வகைப்பள்ளிகள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மாநகராட்சி / தனியார் பள்ளிகள்  மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க  இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  ATTACHMENT
16.03.2020  // கொரோனா விழிப்புணர்வு //
 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் சார்பான வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ATTACHMENT 

Friday, 13 March 2020

13.03.2020  // தேர்வுகள் அவசரம் //

 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு மார்ச்/ ஏப்ரல் 2020  பொதுத் தேர்விற்கான முன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாட்கள்  காப்பாளர்க்கான ஆணையினை 16.03.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்   நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு  வேலூர்அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT