Friday, 28 February 2020

28.02.2020       //  தேர்வுகள் அவசரம் //

அனைத்து உயர்நிலை /மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தேர்வுக்கு வருகைப் புரியாதோர் விவரத்தினை இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்யுமாறு  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Thursday, 27 February 2020

27.02.2020
 அனைத்து அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பயணப்படி, சில்லரை செலவினம் , அஞ்சல் வில்லை நிதி ஒதுக்கீடு  பகிர்ந்தளிக்கப்பட்டு செலவினம் மேற்கொள்ள ஆணை வழங்கப்படுகிறது.  இச்செலவினம்  31.03.2020 க்குள்  மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
27.02.2020
 அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின்  கவனத்திற்கு 
 முதன்மைக்கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / அறைக்கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய கையேடு மற்றும்  தேர்வு துறைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை 28.02.2020 அன்று நண்பகல் 12.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில்,  பள்ளியில் பணிபுரியும்  ஏதேனும் ஒரு ஆசிரியர் / பணியாளர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
27.02.2020  // தேர்வுகள்  //
 அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

  மார்ச் 2020 - மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள்  - தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது சார்பான தேர்வுகள்  இயக்குநர் அவர்களின் கூடுதல் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

27.02.2020  //தேர்வுகள் அவசரம் //
 மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் -2020 ல் முதன்மைக்கண்காணிப்பாளராக செயல்படும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள ஆன்லைன் (ONLINE EXCEL SHEET ) தாளில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரால் அறைக்கண்காணிப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் இதுநாள் வரை தங்கள் மையத்தில் ஆஜராகாத ஆசிரியர்களின் பெயர்களை இன்று மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET
27.02.2020
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 தமிழ்நாடு பொது சார்நிலைப்பணி -ஓட்டுநர் பணியிடத்திற்கு முன்னுரிமைப் பட்டியல்  இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி  இணைப்பில்  உள்ள படிவத்தினை  பூர்த்தி செய்து  தனிநபர் மூலம் அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT   ATTACHMENT
27.02.2020   // தேர்வுகள் அவசரம்//

 மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்-  2020 ல் நடைபெறும்  தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பு எற்க நேரிடும் என்பதை தெரிக்கலாகிறது. 

Wednesday, 26 February 2020

26.02.2020  // SSLC  செய்முறை பொதுத் தேர்வு //

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

SSLC - மார்ச் /ஏப்ரல் - 2020 செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு மட்டும் SEAL  செய்யப்பட்ட  உறையில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று 26.02.2020 மாலைக்குள்  ஒப்படைக்கவும்.

உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் சார்பான படிவங்களை வேலூர் கல்புதூர் அரசு உதவி இயக்குநர்  அலுவலகத்தில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tuesday, 25 February 2020

26.02.2020       // தேர்வுகள் அவசரம் //
         மேல்நிலை இரண்டாம் அண்டு வரலாறு பாடத் தேர்வெழுதும் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் / உதவி தலைமையாசிரியர்கள் உலக வரைபடத்தை வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 26.02.2020 அன்று மாலை 05.00 மணிக்குள்  நேரில் பெற்றுச் செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
25.02.2020

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு  முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும் 
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். 
26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர்நிலை /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 24 February 2020

25.02.2020  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சாரண சாரணீய இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் அவர்களின் பிறந்த நாள்  “ உலக சிந்தனை நாள் ” ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே சாரண சாரணீய மாணவர்களின் “உலக சிந்தனை நாள்” பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. எனவே திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இப்பேரணியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சாரண சாணீய மாணவர்கள் மற்றும் சாரண ஆசிரியர்கள் முழு சீருடையில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

நாள்                                                : 27.02.202  வியாழக்கிழமை

நேரம்                                             : காலை 8 மணி

பேரணி புறப்படும் இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர்

வழி                                                  : தூய நெஞ்சக் கல்லூரி

பேரணி வந்து சேருமிடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
25.02.2020    // தேர்வுகள் அவசரம் //

 அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
மார்ச் 2020 - மேல்நிலை தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் ஆணையினை இன்று (25.02.2020) பிற்பகல் 02.00 மணி முதல்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

24.02.2020     // நினைவூட்டல் //

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மார்ச்/ ஏப்ரல் 2020 , இடைநிலை , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுப் பணிக்கான  கையேடுகள் 
ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT   ATTACHMENT
ATTACHMENT

Sunday, 23 February 2020

24.02.2020 

செய்முறைத்தேர்வுகள் பத்தாம் வகுப்பு - அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர் நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி செய்முறை தேர்வு தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பிப்ரவரி  2020 செய்முறை தேர்வுக்கான படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது.  ATTACHMENT 
24.02.2020
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
பிப்ரவரி 2020 ஆசிரியர்கள்  மற்றும் பணியாளர்களின் சம்பள பட்டியல்  (INCOME TAX)  சரியாக இருக்கும் பட்சத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் சார்ந்த கருவூலத்தில் சமர்பிக்க தெரிவிக்கலாகிறது.  இன்று மாலைக்குள் சமர்பிக்கப்படும் பட்டியல்கள் மட்டுமே இந்த மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கலாகிறது.பின்னர் சமர்ப்பிக்கப்படும் பட்டியல்கள் 01.03.2020  ம் தேதிக்கு மேல் ஊதியம் பெற இயலும் என திருப்பத்தூர்  சார் கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார் .
24.02.2020     அனைத்து  அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

இடைநிலை மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத் தாட்கள் மற்றும் வரைபடம் வழங்குதல் தொடர்பாக இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 21 February 2020

21.02.2020
 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்துதட்டச்சர் நிலை III - 31.03.2020 நிலவரப்படி காலியாக /காலி ஏற்படவுள்ள  பணியிடங்களின் விவரங்களை (தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளதால்) இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று  காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday, 20 February 2020

21.02.2020     // மிக மிக அவசரம் // தனிகவனம் //

 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 3  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குகளில் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் விவரத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில்  இவ்வலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 24.02.2020  அன்று மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு: குறுந்தகட்டில்  பதிவு செய்து 24.02.2020 அன்று மாலைக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


20.02.2020     // மிக மிக அவசரம் // தனிகவனம் //
 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 3  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குகளில் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் விவரத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில்  இவ்வலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 24.02.2020  அன்று மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT, ATTACHMENT

20.02.2020  அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள SSLC,  +1, +2   தேர்வுகளில் தமிழ் மொழி அல்லாத பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில் (SSLC,  +1, +2  தனித் தனித் தாள்களில் வழங்க வேண்டும் )  இன்று மாலைக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் வழங்க வேண்டும். பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் அனுப்பப்பட வேண்டும். ATTACHMENT