Wednesday, 10 July 2019



11.07.2019 - மிக மிக அவசரம் -   அனைத்து   உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு 

 2019-2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த கேட்பு பட்டியலை இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment 

10.07.2019 – தேர்வுகள் நினைவூட்டல் - திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தி நாள்: 08.07.2019, நடைபெற்று முடிந்த இடைநிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 09.07.2019 மதியம் 02.00 மணிக்கு தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் பெற்றுகொண்டு அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கு 10.07.2019 காலை 10.00 மணிக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இந்நாள்வரை பெறப்படாமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாகும். உடனடியாக அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்குமாறு கீழ்கண்டப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
1. அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பேரி.
2.ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3.சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி.
4.தயானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரிசிலாப்பட்டு.
5.இராஜாஸ் மெட்ரிக் பள்ளி, ஆதியூர்.


10.07.2019  தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

10.07.2019 - 04.07.2019 - நினைவூட்டல்-2

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு


      சாலை பாதுகாப்பு -  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் " சாலை பாதுகாப்பு சங்கம் "  (ROAD SAFETY CLUB)  உருவாக்கி சாலை பாதுகாப்பு சங்கம் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் 02.07.2019  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள  பள்ளிகள் நாளை (11.07.2019) காலை 11.00 மணிக்குள் தங்கள் பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் மூலம் ஆ2 பிரிவில்  ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தொகுப்பறிக்கை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டியுள்ளதால்  நாளை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் முதன்மைக்கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.   ATTACHMENT   

10.07.2019 - அனைத்து அரசு/அரசுநிதியுவி  உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 

      தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர்  இணைப்பில் கோரிய  தகவல்களை உரிய காலத்திற்குள் மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 
10.07.2019

       கூட்டம் - அனைத்துவகை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 

1.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 843/இ1/2019 நாள். 20.06.2019
2. வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.2513/இ2/2019 நாள். 07.2019 –ன் படி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் /தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளியில் 11.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.  கூட்டத்திற்கு வரும் போது கீழ்க்காணும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. 2017-2018 ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கைக்கு உரிய கட்டணம் சார்ந்த பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்புகை (Acknowledgement)  3 நகல்களில் கொண்டுவர வேண்டும் (‘A4’ தாள்)  மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகள்  மட்டும்)

2.  2019-2020ஆம் கல்வியாண்டில் RTE 25%  சதவீதம் பள்ளியில் மாணாக்கர்கள் சேர்க்கப்பட்ட விபரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் Arial  Fonts  -ல்  தட்டச்சு  செய்து  அதனை  விவரத்தினை CD-ல் பதிவு செய்து அதன் பிரதியை 3 நகல்களில்  CD-வுடன் ஒப்படைக்க வேண்டும்.

3.  வட்டாரக்கல்வி அலுவலர்கள்  தங்கள் ஒன்றியத்தில் உள்ள நர்சரி  மற்றம் பிரைமரி பள்ளிகளில்  2019-2020ஆம் கல்வியாண்டில் RTE 25%  சதவீதம் பள்ளியில் மாணாக்கர்கள் சேர்க்கப்பட்ட விபரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் தொகுத்து Arial  Fonts  -ல்  தட்டச்சு  செய்து  அதனை  விவரத்தினை CD-ல் பதிவு செய்து அதன் பிரதியை 3 நகல்களில்  CD-வுடன் ஒப்படைக்க வேண்டும்.
            
மேற்காண் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டப் பொருள் சார்பான விபரங்களை ஒப்படைக்காத பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்களின்  பள்ளிகளின் பெயர்கள் தொடர் மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  மெட்ரிக் பள்ளிகளின்  இயக்குநர் மற்றும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது. ATTACHMENT    
RTE Admission Report - 2019-2020 FORM 

Tuesday, 9 July 2019


09.07.2019  தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Monday, 8 July 2019

08.07.2019  தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

08.07.2019  மிக மிக அவசரம் 


அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

BIO METRIC சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் உடனடியாக பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவல் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் 09.07/2019 காலை 10.30 மணிக்கு பூர்த்தி செய்யக் கேட்டுககொள்ளப்படுகிறார்கள். ON LINE ATTACHMENT 
அனைத்துவகை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 

                மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நாளை 09.07.2019 மதியம் 02.00 மணிக்கு பெற வரும்பொழுது 2019-2020ஆம் கல்வி ஆண்டில் RTE மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை உரிய படிவத்தில் 2 நகல்களில் தவறாமல்  சமர்ப்பிக்க வேண்டும். 
      2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான RTE தொகை பெறப்பட்டதற்கான ஒப்புகைச்சான்று மற்றும் பயன்பாட்டுச் சான்று 3 நகல்களில் தவறாது எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  
மேற்காண் விவரங்கள் வழங்காத பள்ளிகள் 

Sunday, 7 July 2019

08.07.2019 - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நாளை 09.07.2019 மதியம் 02.00 மணிக்கு பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
           பள்ளி தலைமையாசிரியர்கள் மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் : 10.07.2019 காலை 10.00 மணி
குறிப்பு:- மேலும் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்கள் அனைவருக்கும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குமாறு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  

Friday, 5 July 2019


05.07.2019  தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Thursday, 4 July 2019



04.07.2019 -  தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Wednesday, 3 July 2019




04.07.2019 - மிக மிக அவசரம் 

நலத்திட்டங்கள் - இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா நலத்திட்டங்களுக்கான  தேவைப் பட்டியல்  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத கீழ் காண் பள்ளிகள் உடனடியாக இன்று (04.07.2019)  மாலை 05.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

1.அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டலநாயனகுண்டா
2.அரசு உயர்நிலைப்பள்ளி, எலவம்பட்டி
3.ஜோதி உயர்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
4.அரசு (ம)  மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
5.அரசு மேல்நிலைப்பள்ளி,  கொரட்டி
6.அரசு மேல்நிலைப்பள்ளி,  கிரிசமுத்திரம்
7.அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டலவாடி குன்னத்தூர்
8.அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு 
9.அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னமூக்கனூர்
10 .செயின்ட்ஜோசப் (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
04.07.2019 - நினைவூட்டல்

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு


      சாலை பாதுகாப்பு -  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் " சாலை பாதுகாப்பு சங்கம் "  (ROAD SAFETY CLUB)  உருவாக்கி சாலை பாதுகாப்பு சங்கம் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் 02.07.2019  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்நாள் வரையில் ஒப்படைக்காத சார்ந்த பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

03.07.2019 -  நினைவூட்டல் -2 

     அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      தங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் நாளை (04.07.2019) காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.   ATTACHMENT   


03.07.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Tuesday, 2 July 2019



03.07.2019 - கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்யிண்டிற்கான 6 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற SC/ST மாணவிகளின்  கல்வி உதவித்தொகை ECS  மூலம் தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.  அப்பணத்தை உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE)  மற்றும் அதற்குறிய Acquittance 2 நகல்களில் 08.07.2019-க்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment 

03.07.2019 - கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்யிண்டிற்கான 6 ஆ ம் வகுப்பு வரை பயின்ற MBC  மாணவிகளின்  கல்வி உதவித்தொகை ECS  மூலம் தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  அப்பணத்தை  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில்  வரவு வைத்து பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE)  மற்றும் அதற்குறிய Acquittance 2 நகல்களில் 08.07.2019-க்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment 
03.07.2019 - மிக மிக அவசரம் 
அனைத்து  அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியகள் கவனத்திற்கு 

     2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும்  சிறுபான்மை மொழி  விலையில்லா பாடநூல்களின் தேவைப்பட்டியல்  விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி  செய்து  இன்று மாலை 05.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஆன்லைன் இணைப்பு