31.05.2019 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத்துணைத்தேர்வு ஜுன் 2019 தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஜூன் 2019 சிறப்புத் துணைத்தேர்விற்கான 1. Attendance Sheet, 2. Center wise Nominall Roll, 3.Hall Seating Plan, 4. Script cover details-னை 31.05.2019 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஜுன் 2019, மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுமைய தலைமையாசிரிய்ர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Friday, 31 May 2019
31.05.2019 அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுகாவலர், பெருக்குபவர், தோட்டபணியாளர், நீர்கொணருபவர், துப்புரவு பணியாளர் (அரசாணை எண்.47 தவிர்த்து) ஆகியோருக்கு மாறுதல் கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. அரசாணை எண். 47-ன் படி துப்புரவாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு அரசாணை எண்.47ன்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் மட்டும் இடமாறுதல் / மனமொத்த மாறுதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ATTACHMENT
31.05.2019 - அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்
ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளதால் உரிய கருத்துருவினை இணைப்பில் கோரப்பட்டுள்ள இணைப்புகளுடன் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 07.06.2019 அன்று சார்ந்த
ஆய்வக உதவியாளர் மூலம் நேரில் ஒப்படைத்திடுமாறு
அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
Thursday, 30 May 2019
30.05.2019 - தேர்வுகள் - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 01.06.2019 அன்று மதியம் 02.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலுகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி மாணாக்கர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 03.06.2019 காலை 10.00 மணி முதல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதனை தெரிவிக்கலாகிறது. சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
30.05.2019 - அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும் அரசு வனத்துறை பள்ளிகளிலுள்ள கழிவறைகளை பராமரிக்க நிதி வழங்கப்பட்டு வரும் பள்ளிகளை தவிர்த்து விடுபட்ட பள்ளிகளின் விவரத்தினை இணைப்பில் கோரப்பட்டுள்ளவாறு சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
Monday, 27 May 2019
27.05.2019 - தேர்வுகள் அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு (+1 ARREAR) / இரண்டாமாண்டு மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணாக்கர்களின் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் 27.05.2019 பிற்பகல் 02.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் . ATTACHMENT
27.05.2019 - தேர்வுகள் - அனைத்து அரசு / நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் 27.05.2019 -ல் scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் ATTACHMENT
Sunday, 26 May 2019
27.05.2019- நிதியுதவி/மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் மற்றும் தாளார்கள் கவனத்திற்கு
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 கீழ் மனுதாரர் கோரிய தகவல் வரிசை எண்.3 மற்றும் 4ல் காணும் கோரிக்கை வினாக்களுக்கு தங்கள் பள்ளி சார்பாக மனுதாரருக்கு பதில் அனுப்பிவிட்டு அதன் விபரம் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
26.05.2019 - தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப்பள்ளி/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 27.05.2019 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்காண் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டதிற்கு சார்ந்த பள்ளித் தலைமையசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, 23 May 2019
24.05.2019 - மிக மிக அவசரம்
அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 24.05.2019 அன்றைய தேதி முதல் 30.05.2019 நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் ஆயத்த நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடநூல் விநியோகம் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் :- 9994632779, 9025639976
Tuesday, 21 May 2019
22.05.2019 - தேர்வுகள்
- தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி
உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்
கவனத்திற்கு
மேல்நிலை
முதலாமாண்டு/ இரண்டாமாண்டு மற்றும் இடைநிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2019
தொடர்பாக தேர்வெழுதிய பள்ளி மாணவ/மாணவிகளின் தேர்வுக் கட்டணம் விலக்கு பெற்ற மாணவ
மாணவியர்களின் எண்ணிக்கை விவரத்தை படிவம் 1,2,3 ல் பூர்த்தி செய்து நாளை 23.05.2019
காலை 11.30 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில்
தனிநபர் மூலமாக நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. Attachment
Friday, 17 May 2019
17.05.2019 - மிக மிக அவசரம் - மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு EMIS சார்பான கூட்டம்
இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களை கீழ்காண் கூட்டத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்
இடம் :- அன்னை மீரா பொறியியல் கல்லூரி,
பூட்டுத்தாக்கு
நாள் :- 20.05.2019
நேரம் :- காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை
ATTACHMENT
Thursday, 16 May 2019
16.05.2019 - நடந்து முடிந்த 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட உழைத்திட்ட சமுதாயத்தின் வழிகாட்டிகளாய் திகழும் அனைத்து வகை அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும். Attachment
Tuesday, 14 May 2019
14.05.2019
ப.வெண் 02/ஆ1/2019 நாள் 14.05.2019
இணைப்பு
மாவட்ட கருவூல அலுவலர் வேலூர் அவர்களின் கடிதம்.
ATTACHEMENT
ப.வெண் 02/ஆ1/2019 நாள் 14.05.2019
அரசு /நிதியுதவி உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் வேலூர் மாவட்ட கருவூல அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் படி ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 முதல் நடைமுறைப்படுத்த தெரிவிக்கலாகிறது.
இணைப்பு
மாவட்ட கருவூல அலுவலர் வேலூர் அவர்களின் கடிதம்.
ATTACHEMENT
Monday, 13 May 2019
13.05.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு
மிக மிக அவரசம் தனி கவனம்
EMIS - ல் Staff- Student- School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.
அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல / வனத்துறை உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கு
நாள். 14.05.2019 செவ்வாய்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : - தந்தை பெரியார் கட்டிட அரங்கம், அன்னை
மிரா பொறியியல் கல்லூரி, அரப்பாக்கம்,
பூட்டுத்தாக்கு
நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ.பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு
நாள். 14.05.2019
நேரம் : காலை 11.30 மணி
இடம் : - காமராஜர் கட்டிட அரங்கம் அன்னை மிரா
பொறியியல் கல்லூரி, அரப்பாக்கம், பூட்டுத்தாக்கு
13.05.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்களை உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலகத்திற்கு ஒரு நகலும், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒரு நகலும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
Friday, 10 May 2019
10.05.2019 - அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 14.05.2019 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com-க்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலக B2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
Thursday, 9 May 2019
10.05.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணக்கர்கள் ஜுன் 2019 துணைத்தேர்விற்கு விண்ணபிக்க தவறிய தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 13.05.2019 மற்றும் 14.05.2019 ஆகிய இருதினங்களில் ஆன்லைனில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விண்ணபித்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். 12th Instructions & 10th Instructions
09.05.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
தமிழ்நாடு அமைச்சுப்பணி - பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணிமாறுதல் மூலம் நியமனம் குறித்து இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி 15.03.2019 நிலவரப்படி முன்னுரிமை பட்டியல் தயார் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார்செய்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.05.2019 அன்று இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. Attachment
Subscribe to:
Posts (Atom)