Sunday, 21 April 2019

22.04.2019 - அனைத்து  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
       அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மூலம் நியமனம் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 15.03.2019 நிலவரப்படி முன்னுரிமை பட்டியல் தயார் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தோர் பட்டியல் அனுப்ப ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  
22.04.2019 - நடந்து முடிந்த +2 பொதுத் தேர்வில் நல்லதொரு தேர்ச்சி விழுக்காட்டை  பெற்று  கொடுத்து, மாணவர் நலனில் அக்கறைக் கொண்டு கல்விப்பணியில் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.,  இணைப்பு



21.04.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு – EMIS மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி அறிக்கை சார்பான கூட்டம் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை 22.04.2019  பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது, இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுடன் கணினி இயக்க தெரிந்த அல்லது EMIS உள்ளீடு செய்ய தெரிந்த ஆசிரியர்களும் தவறாமல் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
    மேலும் அனைத்துவகை மேல்நிலைபள்ளிகள், மேல்நிலை இரண்டாம் ஆண்டின் (+2) தேர்ச்சி அறிக்கையினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கூட்டத்தில் சமர்பிக்க மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment   
குறிப்பு: மேற்காண் கூட்டத்திற்கு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் தவறாமல், கல்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, 16 April 2019

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு 

    நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இருதினங்களில் பள்ளி திற்ந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தலாகிறது ATTACHMENThttps://deotptr.files.wordpress.com/2019/04/election-2019-16-04-2019.docx

Monday, 15 April 2019

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளியில் அரசாணை எண்.47ன் படி துப்புரவாளர்களாக பணியாற்றி தற்போது முழு நேர பணியாளர்களாக நியமன ஆணை வழங்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் பணியினை பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்திடல் வேண்டி கருத்துருக்களை 24.04.2019 அன்று நேரில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனைத்து இணைப்புகளுடன் பணிப்பதிவேட்டுடன் (கல்விச் சான்று உண்மைத்தன்மை நகலுடன்) ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.ATTACHEMENT

Friday, 12 April 2019

12.04.2019 அரசு/நிதியுதவி பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

ஆதிதிராவிடர் நலம் - 2018-2019 ஆம் ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9 &11) FRESH ENTRY MODULE IS ENABLED -  மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையினை உரிய காலத்திற்குள் பெற்று வழங்குவது தலைமையாசிரியரின் பொறுப்பாகும். கால தாமதமின்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும்  30.04.2019-க்குள் கல்வி உதவித்தொகை பெற இணைப்பில் உள்ள வழி முறைகளை பின்பற்றி இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
ATTACHMENT

Tuesday, 9 April 2019

10.04.2019- அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      VPRC - மூலம் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு ஜனவரி -19 மற்றும் பிப்ரவரி -19 மாத ஊதியம் வழங்கிய விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் அது சார்பான விவரம்  இந்நாள் வரையில் ஒப்படைக்காமல் இருப்பதால் இயக்குநருக்கு இப்பொருள் சார்பான தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது.  எனவே ஜனவரி -19 மற்றும் பிப்ரவரி-19 மாத ஊதியம் வழங்கிய விவரத்தினை அளிக்காத  பள்ளிகள் இன்று (10.04.2019) பிற்பகல் 3.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது சார்பான விவரங்களை வழங்காத பள்ளிகளின் பெயர்பட்டியல்  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.  மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT   

Monday, 8 April 2019

09.04.2019 - மிக மிக அவசரம் - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட விவரம் (படிவம் -1) மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரியும் விவரம் (படிவம் -2) இரு படிவங்களையும் பூர்த்தி செய்து நாளை 10.04.2019 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
      மேலும் இப்பொருள் தொடர்பாக தகவல்கள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு உடனே அனுப்பவேண்டியுள்ளதால்  இதன் மீது  தனி கவனம் செலுத்தி கோரப்பட்ட தகவல்களை  குறித்த நாளில் நேரில் தனிநபர் மூலம் ஒப்படைக்க மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 
09.04.2019 -  தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE),  நவம்பர் 2018  (மாநில அளவிலானது) 
             மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு  (NTSE), நவம்பர் 2018 -க்கான முடிவுகள் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்படுகிறது.  தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை   www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

Friday, 5 April 2019

04.04.2019 -  மிக மிக அவசரம்  - நினைவூட்டல் -3 
        2018-2019 ஆம் கல்வியாண்டில் 6,10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ / மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை ஏற்கெனவே 27.03.2019 அன்றையதினத்திற்குள் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிக்கை சமர்ப்பிக்க  அனுப்ப இயலாத சூழல் உள்ளது, எனவே இதன் முக்கியத்துவம் கருதி இந்நாள் வரையில் பதிவு செய்யாத பள்ளிகள்  06.04.2019க்குள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
      மேலும் இப்பொருள் தொடர்பாக  27.03.2019க்குள் பதிவு செய்ய தெரிவித்து இருந்தும் நாளது வரை நடவடிக்கை மேற்கொள்ளாததால்  வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு  தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத  நிலையை சுட்டிக் காட்டப்படுவதுடன், இனியும் காலம் தாழ்த்தாமல் இதுவரை  பதிவு செய்யாத தலைமையாசிரியர்கள் 06.04.2019 பதிவு செய்ய  தெரிவிக்கப்படுகிறது. ONLINE ATTACHMENT  

Thursday, 4 April 2019

05.04.2019 -  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     சுற்றச் சூழல் பாதுகாத்தல் காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்துதல்  சார்பாக.   ATTACHMENT 

Wednesday, 3 April 2019

03-04-2019  -  கோவை தனிக்கை - அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் கோவை தனிக்கை மாதந்திர உத்தேச பயண திட்டம் . ATTACHMENT

Tuesday, 2 April 2019

03.04.2019 - நினைவூட்டல் - 1  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்  நிலை -III 2019-2020 ஆண்டிற்கான காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 04.04.2019 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
03/04/2019  - நினைவூட்டல் -1 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளியில் பணியாற்றும் இளநிலை உதவியாளர், உதவியாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர்கள் மற்றும் கணகாணிப்பாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.04.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லை எனில் இன்மை அறிக்கை கண்டிப்பாக ஒப்படைக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு 
03.04.2019 - பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணிக்கு வருகை புரியாத மற்றும் உபரியாக உள்ளது என்று விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கபட்ட தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர்களை உடன் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
02.04.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு – EMIS மற்றும் Student Attendance app/Student ID சார்பான பயிற்சி கூட்டம் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை 03.04.2019  மாலை 04.00 மணிக்கு நடைபெறவுள்ளது, இப்பயிற்சி கூட்டத்திற்கு கணினி இயக்க தெரிந்த அல்லது EMIS உள்ளீடு செய்ய தெரிந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுடன் தவறாமல் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேற்காண் கூட்டமானது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைப்படியும், வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே தவறாது இப்பயிற்சியில் கலந்துகொள்ளவேண்டுமென அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.  
02.04.2019 - நினைவூட்டல்-1 அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்த்திற்கு - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி  பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக்ப்பள்ளிகளில் 25% ஒதுக்கீடு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% மாணாக்கர்களின் எண்ணிக்கை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ4 & ஆ4 பிரிவில் தனிநபர் மூலமாக நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்நாள் வரையில் ஒப்படைக்காத சார்ந்த பள்ளிகளின் முதல்வர்கள் உடனடியாக நாளை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர்மூலம் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. ஒப்படைக்க தவறும் பட்சத்தில் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளிகளின் முதல்வர்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. 
        மேலும்  பள்ளி சார்பாக பராமரிக்கப்படும் வங்கிகணக்கு புத்தக முதல் பக்க நகல்கள் இரண்டினையும் இவ்வலுவலகத்தில் பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க அறிவிக்கப்படுகிறது.   Attachment 
02.04.2019 - 2019-2020 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில்  வாய்ப்பு மறுக்கப்பட்ட   மற்றும் நலிவடைந்த பிரிவினரின்  குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 100%  இலக்கினை எய்திட  பள்ளிகளுக்கான அறிவுரைகள்.  ATTACHMENT  

Monday, 1 April 2019

01/04/2019
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளியில் பணியாற்றும் இளநிலை உதவியாளர், உதவியாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர்கள் மற்றும் கணகாணிப்பாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.04.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லை எனில் இன்மை அறிக்கை கண்டிப்பாக ஒப்படைக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

Sunday, 31 March 2019

01.04.2019- நினைவூட்டல் - 2 - 2018 -2019ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை ஏற்கனவே 27.03.2019 அன்றைய தினத்திற்குள் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிகை சமர்ப்பிக்க அனுப்ப இயலாத சூழல் உள்ளது, எனவே இதன் முக்கியத்துவம் கருதி இந்நாள் வரையில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (01.04.2019) பிற்பகல்  02.00க்குள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
ONLINE ATTACHMENT