31.01.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - USER REGISTRATION செய்வதற்கான வழிமுறைகள்
(BIOMETRIC ATTENDANCE SYSTEM) இணைப்பில் உள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment Thursday, 31 January 2019
Wednesday, 30 January 2019
31.01.2019 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 2 பிரதிகளிலும் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல் இன்று 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் வழங்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
30.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்துவகை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுமைய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்களை நாளை 31.01.2019 காலை 12.00 மணிக்குள் சரிபார்த்துகொள்ளமாறு அனைத்துவகை தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, 29 January 2019
29.01.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2018-2019 கல்வி ஆண்டிற்கு பயிலும் 10,11,12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் சிகரம் தொடு நிகழ்ச்சி கீழ்கண்ட வாறு (30.01.2019) நாளை நடைபெற உள்ளது அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பொறுப்பான ஆசிரியர்களுடன் மாணாக்கர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம்:- அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
நேரம் - காலை 9.00 மணி
இடம் :- இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்
நேரம் - 1.30 பிற்பகல்
இடம்:- அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
நேரம் - காலை 9.00 மணி
இடம் :- இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்
நேரம் - 1.30 பிற்பகல்
29/01/2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை நாளை (30.01.2019) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் இணைப்பில் உள்ளவாறு உறுதி மொழியினை ஏற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment
29.01.2019- VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 2 பிரதிகளிலும் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல், வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
29.01.2019 - மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.01.2019 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகளுக்கான கூட்டம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் கூட்டம் கீழ் கண்டவாறு நடைபெற உள்ளதால் அரசு/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நாள் :- 30.01.2019, நேரம் :- காலை 11. 00 மணிகல்வி மாவட்டங்கள் :- திருப்பத்தூர் மற்றும்
வாணியம்பாடி
Sunday, 27 January 2019
27.01.2019 - அவசரம் தனிகவனம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள்/ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதிலியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் மேற்கொள்ளுமாறு அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து உரிய கல்வி தகுதி சான்றிதழ்களை இணைப்புடன் பெற்று கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Friday, 25 January 2019
25.01.2019 - தனி கவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - நாளை 26.01.2019 குடியரசு தினவிழாவை அனைத்து தொடக்க/ நடுநிலை /உயர் நிலை /மேல்நிலை பள்ளிகளில் தவறாமல் கொண்டாடப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. எவ்வித காரணங்களை முன்னிட்டும் குடியரசு தினவிழா தடைபடாமல் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
25.01.2019 - தேர்வுகள் அவசரம் - மார்ச் 2019 இடைநிலைப் பொதுத்தேர்வு - செய்முறைத் தேர்வுக்கு தேவையான எழுதுப்பொருட்கள் இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியான விடைத்தாட்களை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 30.01.2019 அன்று காலை 09.30 மணி முதல் (30.01.2019 அன்று ஒரு நாள் மட்டும்) இணைப்பில் உள்ள செயல்முறை கடித்ததிற்கிணங்க பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
25.01.2019 - அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவியிலிருந்து 01.01.2019 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் அனுப்பிய பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தவர் இல்லை எனில் இன்மை அறிக்கையினை 28.01.2019 மாலை 4.00 மணிக்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, 24 January 2019
24.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனவத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல், சரிபார்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுறைகள் (NR CORRECTION PROCEDURE VIDEO CLIPPING) Attachment
24.01.2019 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு -
EMIS - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை - இணையதளத்தில் பதிவு செய்தல் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
Wednesday, 23 January 2019
24.01.2019 - மிக மிக அவசரம், தனி தகவனம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
22.01.2019 அன்று முதல் நடைபெற்று வரும் ஜக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெயர்பட்டியலை இன்று (24.01.2019) 4.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மூன்று பிரதிகளில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
23.01.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கம் செய்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். Attachment
Tuesday, 22 January 2019
22.01.2019 - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் 24.01.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
22.01.2019- ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் deottr@nic.in என்ற மின்னஞ்ல் முகவரிக்கு காலை 10.15 மணிக்குள் தினசரி அனுப்பிவைக்க அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment
Monday, 21 January 2019
22.01.2019 - தேர்வுகள் - மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணக்கர்களின் பெயர்பட்டியல் (Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள். திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு பதிவிறக்கம் செய்த Nominal Roll-னை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு 28.01.2019 அன்று காலை 11.00 ம்ணிக்கு ஒரு நகலினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
Subscribe to:
Posts (Atom)