Wednesday, 12 December 2018

12.12.2018 - அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - EMIS- 2018- 2019 ஆம் கல்வியாண்டில் கல்விதகவல் மேலாண்மை முறைமை (EMIS-Website) இணையதளத்தில் மாணவ/மாணவியர்களின் ஆதார் இணைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் புகைப்படம்  பதிவேற்றம் செய்தல் பணி விரைந்து முடிக்கத் தெரிவிக்கலாகிறது. Attachment 

Tuesday, 11 December 2018

12.12.2018 - 2018 - NMMS தேர்வுகள் - 15.12.2018 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்வுகளுக்கான முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான கூட்டம் - 
நாள் :- 13.12.2018  
நேரம் : காலை 10.30 மணி 
இடம்:  மாவட்டக்கல்வி அலுவலகம், திருப்பத்தூர்

தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கூட்டத்தில் தவறாது கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
12.12.2018 -  06.12.2018, 07.12.2018,10.12.2018 மற்றும் 11.12.2018 ஆகிய நாட்களில் 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத கீழ்காண் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் உடனடியாக இன்றே சமர்ப்பிக்க தெரிவித்தல்

 Pending School list 

1
Govt HIGH SCHOOL, CHANRAPURAM
2
GOVT HIGH SCHOOL, CHINNAMOOKANUR
3
ST.CHARLES HSS, ATHANAVOOR
4
Govt GIRLS HIGHER SECONDARY SCHOOL, GAJALNAYAKKANPATTI 
5
Govt HIGH SCHOOL, VENGALAPURAM
6
Jothi High School, GAJALNAYAKANPATTI
7
SHRI AMRITA HIGHER SECONDARY SCHOOL, TKNARASIMHAN NAGAR  P KASINAYAKANPATTI  POST  VELLORE
8
Govt BOYS HIGHER SECONDARY SCHOOL, MADAVALAM 
9
Govt HIGH SCHOOL, PERUMAPATTU
10
GOVT HIGH SCHOOL, GUDIMALLUR

Monday, 10 December 2018

11.12.2018 - நவம்பர் 2014-2015 மற்றும் 2016 ஆகிய பருவங்களில் NMMS தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களை Off Line மூலம் நடப்பு 2018-2019 புதிய மாணவர்களின் விபரங்களை Online-லும் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் Special Camp திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 12.12.2018 காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

             எனவே இதுவரை NMMS தகவல்களை பதிவு செய்யாத, பதிவு செய்ய இயலாத மாணவ மாணவியர்களின் தகவல்களுடன் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு வரவேண்டுமென சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிய மாணவர்களுக்கான தகவல்களை பதிவேற்றம் செய்யும் போது சார்ந்த மாணாக்கர்களுக்காக  வழங்கப்பட்ட செல்பேசிக்கு "OTP " வர உள்ளதால் அதை தெரிவிக்கும் வகையில் முன்னேற்பாட்டுடன் வரவேண்டுமாய் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு :-  NMMS  இணையதளம் 12.12.2018 அன்று ஒரு நாள் மட்டும் செயல்படுவதால் அன்றைய தினத்தில் இணைய தளத்தில்  பதிவுவேற்றம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறு சார்ந்த  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
10.12.2018 - மிக மிக அவசரம் -   NMMS   -  ஆன்லைனில் புதுப்பிக்காத பள்ளிகள் உடன் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்குச்  சென்று புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
10.12.2018- அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  - பார்வையில் காணும் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து இரு நகல்களில் 12.12.2018-க்குள்  இவ்வலுவலகத்தில் நேரில்  சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கலாகிறது. Attachment 

Friday, 7 December 2018

07.12.2018 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2018-2019ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் முகாமில் கலந்து கொள்ளுதல் சார்பாக  Attachment 
07.12.2018 -  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி சார்பான நிலம் கல்வித்துறையின் கீழ் கொணர தமிழ்நிலம் என பாகுபாடு செய்வது தொடர்பாக  இணைப்பில் காணும்  படிவத்தில் பூர்த்தி செய்து   10.12.2018 அன்று இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் முத்திரை, கையொப்பத்துடன்  இரு நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment 
07.12.2018 -  னைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு - நவம்பர் 2014, 2015, 2016 ஆகிய பருவங்களில்  NMMS  தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களை நடப்பு 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு  "புதுப்பித்தல் "  செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. 
            இதில் பதிவேற்றம் / புதுப்பித்தல் செய்ய இயலாத  பள்ளிகள் தங்கள் பள்ளி சார்பாக கணினி இயக்கத் தெரிந்த ஒரு பணியாளரை அனைத்து ஆவணங்களுடன் 11.12.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி அங்குள்ள  கணினி வல்லுநர் (Experts)  மூலமாக பதிவேற்றம் / புதுப்பித்தல் பணியை உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

07.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு  கணினி அறிவியல் பயிலும் மாணவர்களுக்கான (COMPUTER SCIENCE, COMPUTER APPLICATIONS, COMPUTER TECHNOLOGY) பாடங்களுக்கான Practical contents மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதள முகவரியிலிருந்து (www.tnscert.org)  பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

Wednesday, 5 December 2018

06.12.2018 - அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ வட்டாலரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு -  நவம்பர் -2014, நவம்பர் -2015 மற்றும் நவம்பர் -2016 -இல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் தகவல்களை நடப்பாண்டிற்கு புதுப்பிக்கும் (Reneval)  விபரம் இணைப்பில் கண்டவாறு பதிவிடப்படுகிறது. இந்த மாணவர்களை இனம் கண்டு Eligible-Ineligible என பதிவேற்றம் செய்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இப்பதிவேற்றத்தில் ஏதேனும் விபரம் தேவைப்படின் கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்று பதிவேற்றம் செய்யலாம். இப்பொருள் தொடர்பாக தினமும் முன்னேற்ற அறிக்கை அனுப்ப வேண்டி உள்ளதால்  தினமும்  
04179-221197  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தினசரி அறிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  படிவம்  ATTACHMENT
கைபேசி எண்
1.8248828951
2.9488303580
05.12.2018 -  அனைத்து  வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவும் வகையில் விருப்பம் உள்ள ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாத பணியாளாகளின்  ஒரு நாள் ஊதியத்தினை ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று அதன்பின் 12.2018 மாத ஊதியப் பட்டியலில் பிடித்தம் மேற்கொள்ள அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு -அரசாணை 
05.12.2018- அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - 2011-2012 முதல் 2016-2017 வரையிலான கல்வியாண்டுகளில் மடிகணினி  பெறப்பட்ட விவரம்/வழங்கிய விவரம்/திரும்ப ஒப்படைக்கப்பட்ட விவரம் ஆகியன சார்ந்த 'ERP Entry' விவரங்களை  உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு அறிக்கையை  இன்றே அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Tuesday, 4 December 2018

05.12.2018 -  தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள்  கவனத்திற்கு -  EBS  படிவத்தில் விவரங்களை இணைப்பில்  கோரப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்து (ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் சார்பாக தனித்தனியாக)  
1. உ.நி.பள்ளிகள் 11.12.2018 அன்று காலை 11.00 மணிக்கும், 
2. மே.நி.பள்ளிகள் 11.12.2018 அன்று மாலை 2.30 மணிக்கும்,
3.மெட்ரிக் பள்ளிகள் 12.12.2018 அன்று காலை 11.00 மணிக்கு தனி நபர் மூலம் நேரில் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பபிக்க தெரிவிக்கலாகிறது.   Attachment 
04.12.2018 - மார்ச்/ஏப்ரல் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாணாக்கர்களின் பெயர் பட்டியல் (Nominal Roll) கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்யவதற்கு கால நீட்டிப்பு செய்யப்படுள்ளதை தெரிவித்தல் Attachment

Monday, 3 December 2018

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளி / அலுவலகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரத்தினை (01.12.2018 நிலவரப்படி) உடன் இ-மெயிலில் (06.12.2018க்குள்) அனுப்பி வைத்து அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு தனி நபர் மூலமாக அன்றே அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கலாகிறது.

படிவம்

பள்ளி எண்                   பள்ளியின் பெயர்

1. வ.எண்
2. பணியிடத்தின் பெயர்
3. எந்த தேதி முதல் காலி ஏற்பட்டது
4. காலி ஏற்படக் காரணம்



                                                                         மாவட்டக்கல்வி அலுவலர்
                                                                              திருப்பத்தூர்.வே.மா.
பெறுநர்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள்
திருப்பத்தூர் கல்வி மாவட்டம்

04.12.2018  மார்ச்/ஏப்ரல் 2019 இடைநிலைப் பொதுத்தேர்வுகள் – மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்களின் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணபங்கள் 10.12.2018 மாலை 03.00 மணிக்குள் சமர்பிக்க கோருதல் Attachment

Sunday, 2 December 2018

03.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக வீர தீரசெயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் (ஜனவரி 24) மாநில அரசு விருது பெற விண்ணப்பம் அனுப்ப கோருதல்.  Attachment 
03.11.2018  - அனைத்து வகை உயர்/மேல்நிலை/ஆங்கிலோ இந்தியன் பள்ளி கணக்குகள் தணிக்கை செய்தல்- 
கோவை மண்டல  கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத்திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம் அனுப்புதல்  Attachment 

Friday, 30 November 2018

30.11.2018 -  தேர்வுகள் அவசரம் - 2018-2019ஆம் கல்வியாண்டு -10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை Attachment