Wednesday, 24 August 2022

 24.08.2022  // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி எண்வகைப்பட்டியலை தயார் செய்து அளவுகோல் பதிவேட்டுடன் அனைத்து படிவங்களையும்    3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் 25  மற்றும்  26.08.2022  மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

இப்பொருள் சார்பாக கீழ்கண்ட பணியாளர்கள்   மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது.

1. திரு. பி.காளிவேல்  இளநிலை உதவியாளர், அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி

2.திரு. விஜயகுமார் , இளநிலை உதவியாளர் , அரசு உயர்நிலைப்பள்ளி, கொடுமாம்பள்ளி

3 . செல்வி. சோபனா, இளநிலை உதவியாளர், அரசு மேல்நிலைப்பள்ளி, விசமங்கலம் 

மேற்கண்ட பணியாளர்களை உடன் பள்ளி பணியிலிருந்து விடுவித்து இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.