09.11.2021 //மிக அவசரம் //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
நவம்பர் - 2021 தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கனமழை காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதால் 10.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவுள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணை தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.