02.11.2021
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரசு விலையில்லா நலத்திட்டங்கள் ( பாடநூல்கள், நோட்டுப்புத்தகம், சீருடைகள் (நான்கு இணை), புத்தகப்பை, காலேந்திகள் மற்றும் காலுறைகள், புவியியல் வரைபடம், கணிதஉபகரணப்பெட்டி, மலைவாழ் மாணாக்கர்களுக்கான மழைக்கோட்டு, ஆங்கிள் பூட், கம்பளி சட்டை) வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் பள்ளிகள் பெறப்படாமல் இருப்பின் அப்பள்ளிகள் 02.11.2021, 03.11.2021 ஆகிய நாட்களில் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்புகொண்டு தேவைப்படும் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவலுக்காக,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.