17.09.2021 // தேர்தல் அவசரம் //
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இதுநாள் வரை தேர்தல் பணிக்கான படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் உடனடியாக படிவத்தை பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக “ அ1” பிரிவில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தில் புகைப்படம் வழங்காதவர்கள் உடனடியாக CPS மற்றும் GPF எண்ணுடன் “அ1” பிரிவில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக ஒத்துழைப்பு வழங்காத ஆசிரியர்கள் பெயர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதுடன் துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்ற விபரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.