26.08.2021 // மிக மிக அவசரம் //
அனைத்து மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
சென்னை மாநில கணக்காயரின் ஆய்வுக்கு முன்னிலைப்படுத்த வேண்டி 2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி - 2009 இன் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கப்படும் கல்வி கட்டணம் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் கடிதம் 3 நகல்களில் நாளை 27.08.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.
குறிப்பு: கணக்கில் வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தக நகல் 3 நகல்கள் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி - 2009 இன் கீழ் பயிலும் மாணவர்களின் கேட்பு பட்டியல் சரிபார்த்து பிரித்து மெட்ரிக் பள்ளி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பும் வகையில் தங்கள் பள்ளியிலிருந்து RTE தெரிந்த பணியாளர்களை நாளை 27.08.2021 காலை 11.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.