19.04.2021 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) கணக்கில் விடுப்பட்ட விவரங்களை (MISSING CREDITS) திருப்பத்தூர் சார் கருவூலத்தில் பெற்று இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்கள் பரிந்துரையுடன் 20.04.2021 அன்று மாலைக்குள் திருப்பத்தூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விடுப்பட்ட விபரங்களை (MISSING CREDITS) சரி செய்து கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2