Tuesday, 9 March 2021

10.03.2021   அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு  17.02.2021 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 50 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கோரிய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதம் உள்ள 27 பள்ளிகள் கோரிய விவரங்களை வழங்காமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. மேலும்  இக்காரணத்தினால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் இதுநாள் வரை அனுப்பாத பள்ளிகள் இன்றே (10.03.2021) விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.   இணைப்பு-1 

முக்கிய குறிப்பு:  இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் இதர விவரங்கள் சரியாக உள்ளது என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்று அளித்து கையொப்பமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.