18.02.2021 // NMMS அறைக் கண்காணிப்பாளர் விடுவித்தல் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
21.02.2021 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் ஆணை சார்ந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. சார்ந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.