15.02.2021 // மிக அவசரம் //
ஆதிதிராவிடர் நலம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் கிராமபுற பெண் குழந்தைகளுக்க கல்வி ஊக்குவிப்பு தொகை நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கிற்கே திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலரால் வழங்கப்படவுள்ளது. இப்பொருள் சார்பாக கீழ் காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்கு விவரம் சரியானது என உறுதிப்படுத்தி கொள்ளவும்,
2. மாணவிகளின் வங்கி கணக்கு விவரம் வழங்காத பட்சத்தில் நடைமுறையில் உள்ள மாணவி / மாணவி தாயார் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக deotpt2015@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் நகல் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. மாணவிகளின் அஞ்சலக கணக்கு எண்ணிற்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
4. மாணவிகளின் விண்ணப்பங்கள் இதுநாள் வரை சமர்ப்பிக்க பள்ளிகள் விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.