12.01.2021
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
வருகின்ற 19.1.2021 அன்று முதல் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது சார்ந்து, ஆய்வுக்கூட்டம் இன்று 12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சரியாக 4.00 மணி அளவில் திருப்பத்தூர்,அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால்அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் தெரிவிக்கப்படுகிறது
மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆங்கிலம் (16 பக்கங்கள்) மற்றும் தமிழில் வெளியிட்டுள்ள Corona -19 (STANDARD OPERATING PROCEDURES ) நகல்கள் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும்.
இக்கூட்டத்தில் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
/திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுபடி/
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாள்- .12.01.2021
இடம் - மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
நேரம் - பிற்பகல் 04.00 மணி
மாவட்ட கல்வி அலுவலர் திருப்பத்தூர்.