13.01.2021 நினைவூட்டல் - 2 //NMMS தேர்வுகள்//
அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களின் விண்ணப்பப் படிவங்களை இணைப்பில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
PROCEDURES APPLICATION REGISTRATION PROCESS
குறிப்பு1 : பதிவேற்றம் முடிந்தவுடன் SUMMARY REPORT இரண்டு நகல் மற்றும் CANDIDATE DETAILS REPORT நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்) சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு 2 : தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறிய தலைமை ஆசிரியர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.