26.12.2020
அரசு/ அரசு உதவிபெறும் /மெட்ரிக்/ சிபிஎஸ்இ/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு:
இன்று மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,
தேசிய இளைஞர் விழா 2020 கொண்டாடும் பொருட்டு 29. 12. 2020 மற்றும் 30.12.2020 அன்று கீழ்காணும் போட்டிகள் நடைபெற உள்ளது.
11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள்.
இசை, நடனம் ,உடை அலங்காரம் ,நாடகம் காட்சிகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற போட்டிகளில் இணைப்பில் கண்ட விவரங்களின்படி கலந்துகொள்ளலாம். மாணவர்களை தயார் செய்து கலந்து கொள்ளும் போட்டி சார்ந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் காட்சி விவரத்தினை வீடியோ செய்து (கொடுக்கப்பட்டுள்ள நேரத்துக்குள்) பென்டிரைவ் அல்லது சிடியில் பதிவு செய்து போட்டி நடைபெறும் நாளன்று தலைமையாசிரியரின் உறுதிமொழி கடிதத்துடன் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஒரு பொறுப்பாசிரியர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு சார்ந்த அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
போட்டிகள் நடைபெறும் இடம்: தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்
நடைபெறும் நாள்: 29.12.2020,30.12.2020
9 மணி முதல் 4 மணி வரை.
போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களின் விவரங்களை
இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, வருகின்ற திங்கட்கிழமை 28.12.2020 அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT -3, ATTACHMENT - 4 ATTACHMENT - 5 ATTACHMENT - 6