Sunday, 6 December 2020

 07.12.2020        நினைவூட்டல் - 1      // தேர்வுகள் //  மிக மிக அவசரம் //

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு தேர்வு எழுதிய  பள்ளி மாணாக்கர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் ( INCLUDING ENGLISH MEDIUM)   SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB  இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET

குறிப்பு . 

1). தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.


2.)   12, 11 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனி தாள்களில் (SHEET) உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.