Wednesday, 7 October 2020

 07.10.2020    //தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய கல்வி உதவி தொகை திட்டம் - பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE)  - 2012-2013, 2013-2014, 2014 - 2015 , 2015 - 2016  மற்றும் 2016-2017  ஆகிய  ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு பயின்று தொடர்ந்து அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகுதியான SC/ST  மாணவியர்களின் விவரங்கள் பெறப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்மாணவியர்களை கண்டறிந்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  அம்மாணவியர்களின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதி 4 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.09.2020  க்குள் சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 15 பள்ளிகள் மட்டுமே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்படி குறிப்பிட்ட ஆண்டுகளில் ஆண்டு வரியாக தொகுத்து கண்டிப்பாக 4 நகல்களில் நாளை (08.10.2020) மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் இன்மை அறிக்கை என்றாலும் ஆண்டு வாரியாக 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்    ATTACHMENT1   ATTACHMENT2     PROFORMA