22.10.2020 // நினைவூட்டல் - 1 //
அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தங்கள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு 2 நகல்களில் 20.10.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்நாள் வரை சில பள்ளிகள் மட்டுமே வழங்கியுள்ளன, இதுவரை வழங்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (22.10.2020) பிற்பகல் 03.00 மணிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அறிக்கை வழங்கவேண்டியுள்ளதால் தாமதத்திற்கு இடமில்லாமல் தனி கவனம் செலுத்தி ஒப்படைக்குமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT படிவம்
குறிப்பு. இப்பொருள் தொடர்பாக தகவல் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாது வழங்கப்படவேண்டும் .