Wednesday, 21 October 2020

 21.10.2020   //நினைவூட்டல் - 2

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 இணைப்பில் உள்ள கடிதத்தின்படி தேசிய பெண்குழுந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின் படி (NSIGSE)  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் SC/ST  பிரிவு மாணவியர் தங்கள் இடைநிலைக்கல்வியை கைவிடா வண்ணம் அவர்களின் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2012 -2013, 2013 - 2014 , 2014 - 2015, 2015 - 2016, மற்றும் 2016 -2017 ஆகிய 5 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகதியான மாணவியரின் பெயர்பட்டியலை சரிபார்த்து அவர்களின் வங்கிகணக்கு  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளதா என்பதையும்  வங்கியின் பெயர் ,IFSC  குறியீடு மற்றும் வங்கிகணக்கு எண் நடைமுறையில் உள்ளதா என்பதையும் உறுதி செய்து மாணவியரின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  ஆண்டு வாரியாக தொகுத்து 4 நகல்களில் 29.10.2020  க்குள் தனிநபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என  அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்மை அறிக்கை என்றாலும 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ATTACHMENT1 ATTACHMENT2.ATTACHMENT3.ATTACHMENT4.