Tuesday, 8 September 2020

 08.09.2020         நினைவூட்டல் - 1    // தனிகவனம்  //  

அரசு /அரசு நிதியுதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

NMMSS - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு உதவித் தொகை பெற தேர்ச்சி பெற்ற தற்போது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக பெற்று NSP இணைய தளத்தில் (கடைசி தேதி: 15.09.2020)  விண்ணப்பிக்குமாறு  01.09.2020 அன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 9 மாணவ /மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்தக்கது. கால அவகாசம் மிக குறைவாக உள்ளதால் இப்பொருள் மீது தனி கவனம் செலுத்தி மாணவ /மாணவிகள் எவரும் விடுபடாமல் 15.09.2020 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணைய தளத்தில் புதுப்பிக்கவும், தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT