17.08.2020 // மிகவும் அவசரம்//
அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
நடப்பு ஆகஸ்டு - 2020 மாதம் முதல் IFHRMS திட்டத்தின் கீழ் மட்டுமே அனைவருக்கும் ஊதியம் மற்றும் பிற பட்டிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட உள்ளது. எனவே நாளது வரை IFHRMS பதிவுகளை பதிவேற்றம் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18.08.2020 முதல் 24.08.2020 வரை பயிற்சிப் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே உரிய ஆவணங்களுடன் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 18.08.2020 காலை 10.00 மணிக்கு ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியாளர்களுடன் வருகை தருமாறு அனைத்து வகையான தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.