Monday, 17 August 2020

17.08.2020    // மிக மிக அவசரம் //

2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க காசோலை மூலமாக தலைமை ஆசிரியரிடம்  ஏற்கனவே வழங்கப்பட்டது. அதனை பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து பயனீட்டுச் சான்று மற்றும் பற்றொப்பம் 3 நகல்களில் 17.07.2020 க்குள் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. ஆனால்  இணைப்பில் உள்ள சில பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்காததால் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்க்கு மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பயனாளி மாணவிகளுக்கு வழங்கி பயனீட்டுச் சான்று மற்றும் பற்றொப்பம் 3 நகல்களில் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 19.08.2020 க்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT