09.06.2020 // மிக அவசரம் //
அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக்கல்வி - 2019 - 2020 ம் கல்வியாண்டில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை - 2, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று 31.05.2020 வரை மறுநியமன அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் சார்பாக ஓய்வூதிய கருத்துருக்கள்/பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முடிவுத் தொகை மாநில கணக்காயர் /அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பிய விவரங்கள் இத்துடன் இணைத்துள்ள படிவங்களில் பதவி வாரியாக தனித் தனி படிவத்தில் பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 02.06.2019 முதல் 01.05.2020 வரை எவரும் ஓய்வு பெறவில்லை எனில் இன்மை அறிக்கையினை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT