Tuesday, 10 March 2020

11.03.2020        // மிக மிக அவசரம் // தனிகவனம் //

 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தின்படி 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளின் வங்கி கணக்குகள் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்கு விவரங்களை கொடுக்கப்பட்ட படிவத்தில் தனித் தனியாக பூர்த்தி செய்து மென் நகலில் (CD)  (Soft Copy) ஒன்றும் மற்றும் 3 வன் நகலிலும் (Hard Copy) இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி ஏற்கனவே 21.02.2020 அன்று கோரப்பட்டது. ஆனால் இணைப்பில் கண்ட பள்ளிகள் இதுவரை ஒப்படைக்கவில்லை இதனால் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மறு நினைவூட்டலுக்கு இடமின்றி நாளை 12.03.2020 பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ATTACHMENT-1,   ATTACHMENT - 2

குறிப்பு: 1. படிவத்தில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது.
                  2. SC மற்றும் ST விவரங்கள் தனித் தனியாகவும்.
                 3. Bank மற்றும் Post Office Account விவரங்கள் தனித் தனியாகவும்  (SHEET 1 &                                SHEET 2)  வழங்கவேண்டும்.