24.01.2020 //தேர்வுகள் அவசரம்//
பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,
மார்ச் 2020 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மைய பட்டியல் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதவுள்ள இணைப்புபள்ளிகளில் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்துடன் 25.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு வருகை புரிந்து சரிபார்த்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் முத்திரையுடன் வருகைபுரியும்மாறும், வேறுநபரை அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தேர்வு மையத்திற்கான சரிபார்ப்பு பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் தகவல்கள் 27.01.2020 அன்று சென்னை அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் தனி கவனம் செலுத்தி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கூட்டம் நடைபெறும் இடம்: மாவட்டக்கல்வி அலுவலகம் , திருப்பத்தூர்
நாள் : 25.01.2020
நேரம்: காலை 11.00 மணி