Saturday, 14 December 2019

15.12.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -  திருப்பத்தூர் மாவட்டம், மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறுவதால் அனைத்து அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:- கூட்டத்திற்கு வரும்பொழுது 2018-19ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேர்ச்சி அறிக்கை மற்றும் 2019-20ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி அறிக்கையினையும் உடன் அவசியம் கொண்டுவருமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.