Tuesday, 24 September 2019

25.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு 2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் தேர்விற்கு வெற்று விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு கட்டணம் ரூ 50/- உடன் 16.10.2019-க்குள் பெற்றுக்கொள்ளவேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககத்திலிருந்து தகவல் பெறப்பட்டவுடன் இவ்வலுவலக இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment