30.05.2019 - தேர்வுகள் - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 01.06.2019 அன்று மதியம் 02.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலுகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி மாணாக்கர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 03.06.2019 காலை 10.00 மணி முதல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதனை தெரிவிக்கலாகிறது. சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.