08.05.2019 - தேர்வுகள் மிக மிக அவசரம் - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசியர்கள் /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பாக தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர், (ஆங்கிலம்/தமிழ்) பிறந்த தேதி, பயிற்று மொழி (Medium) , புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் மட்டும் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பெயர்பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தினை 09.05.2019 காலை 11.00க்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க வேண்டும். திருத்தங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். திருத்தங்கள் இருப்பின் உரிய காலத்திற்குள் திருத்தங்களை மேற்கொள்ளாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT