30.04.2019 - புகையிலை தடுப்பு
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு சில சமூக விரோதிகள் பள்ளி குழந்தைகளுக்கு / மாணாக்கர்களுக்கு உண்ணும் உணவுப்பொருட்களில் /தின்பண்டங்களில் புகையிலை மற்றும் அது சார்ந்த போதை பொருட்களை விற்பனை செய்வதாகவும் அது உடல் நலத்திற்கு தீங்கு /கேடு விளைவிக்கும் என எச்சரிக்கை வாசகம் இன்றி விற்பனை செய்வதாகவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு புகார் வரப்பெற்றுள்ளது. அவ்வாறு புகையிலை மற்றும் போதை பொருட்களை பள்ளி மாணாக்கர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
எனவே அவ்வாறு தங்கள் பள்ளிக்கு அருகே விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கண்டால் உடனே சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் காவல் துறைக்கு புகார் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.