Tuesday, 23 April 2019


23.04.2019 - அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர் நிலை/மேல்நிலை /மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு 


2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்  6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு முடிவுகள் 24.04.2019 அன்று காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளியில் மேலொப்பம் பெற்று தங்கள் பள்ளியில் 26.04.2019 அன்று தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் தேர்ச்சி அறிக்கை 2 நகல்களில் ஒப்படைக்க வேண்டும்.

     1.கொடிகள் பணம், 2.பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 5% தொகை, 3.மருத்துவ நல நிதி தொகை, 4.சாரண சாரணியர் நிதி, 5.இந்திய செஞ்சிலுவை கட்டண நிதி உடன் செலுத்தப்பட வேண்டும், மேலும் அதற்கான இரசீதுகளை தேர்ச்சி பதிவேட்டில் ஒப்பம் பெறும் போது அதன் நகலை ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவிக்கலாகிறது.

(குறிப்பு:- 1. உடற்கல்வி மற்றும் சூற்றுச் சூழல் பாடங்களுக்கு  தனித்தனியே மதிப்பெண்கள் மற்றும் தர நிலை பதிவு செய்து எடுத்துவரவும்.

     2. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 24.04.2019 அன்றே  தேர்ச்சி அறிக்கையில் ஒப்புதல் பெற வேண்டும், பிற நாட்களில் வருவதை தவிர்க்கவும் 

            3.மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் LKG வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளில் மேலொப்பம் பெற மேற்காண் மையத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்)