04.04.2019 - மிக மிக அவசரம் - நினைவூட்டல் -3
2018-2019 ஆம் கல்வியாண்டில் 6,10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ / மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை ஏற்கெனவே 27.03.2019 அன்றையதினத்திற்குள் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிக்கை சமர்ப்பிக்க அனுப்ப இயலாத சூழல் உள்ளது, எனவே இதன் முக்கியத்துவம் கருதி இந்நாள் வரையில் பதிவு செய்யாத பள்ளிகள் 06.04.2019க்குள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பொருள் தொடர்பாக 27.03.2019க்குள் பதிவு செய்ய தெரிவித்து இருந்தும் நாளது வரை நடவடிக்கை மேற்கொள்ளாததால் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலையை சுட்டிக் காட்டப்படுவதுடன், இனியும் காலம் தாழ்த்தாமல் இதுவரை பதிவு செய்யாத தலைமையாசிரியர்கள் 06.04.2019 பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. ONLINE ATTACHMENT