25.03.2019 அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இலவச பயண அடையாள அட்டைகள் (ஸ்மார்ட் கார்டுகள்) 2019-2020 அடுத்தகல்வி ஆண்டிற்க்கு இலவச பயண அடையாள அட்டை வழங்கும் வரை இந்த வருடம் (2018-2019) வழங்கிய அடையாள அட்டையை வைத்து மாணவ/மாணவியர் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க ஏதுவாக இருக்கும். மேலும் 2017-2018ல் வழங்கிய அடையாள அட்டையை வைத்து 2019-2020ஆம் கல்வியாண்டிற்கு இலவச பயண அனுமதி அட்டை பெறாத மாணவ மாணவிய இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள், எனவே பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பயண அடையாள அட்டை வேண்டுபவர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்டலம் மற்றும் விழுப்புரம் மண்டல அலுவலகத்தில் மாணாக்கர்களின் பெயர்பட்டியலை CD (குறுந்தகடு) இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அடையாள அட்டை தேவையில்லை எனில் பள்ளிகளிலிருந்து இன்மை அறிக்கை (Nil Report) சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.